ENDHA PAKKAM

 எந்த பக்கம்



Movie:  Dharmadurai 

Singers: Chinmayi sripada, Rahul nambiar

Music director: Yuvan Shankar raja 


பெண்: எந்த பக்கம் காணும்போதும் வானம் ஒன்று..
நீ எந்த பாதை ஏறும் போதும் ஊர்கள் ஒன்று..
ஒரு காதல் தோல்வி காணும் போதும் காதல் உண்டு..
சிறு கரப்பான் பூச்சி தலை போனாலும் வாழ்வதுண்டு..
அட ரோஜா பூக்கள் அழுதால் அது தேனை சிந்தும்..
என் ராஜா பையன் நீ அழுதால் அதில் யானம் மிஞ்சும்..
உன் சோகம் ஒரு மேகம்
நான் சொன்னால் அது போகும்..
உன் கண்ணீர் ஏந்தும் கன்னம் நான் ஆகும்..

எந்த பக்கம் காணும்போதும் வானம் ஒன்று..
நீ எந்த பாதை ஏறும் போதும் ஊர்கள் ஒன்று..

எப்போதுமே இன்பம் என்றால் முன்னேற்றமே ஏது..
எப்போதுமே பகலாய் போனால் வெப்பம் தாங்காதே..
மனசை சலவை செய்ய ஒரு கண்ணீர் நதிதான் உண்டு
உன் உயிரை சலவை செய்ய பெரும் காதல் நதி உண்டு..
உன் சுவாசப்பையை மாற்று..
அதில் சுத்தக்காற்றை ஏற்று..
நீ இன்னோர் உயிரில் இன்னோர் பெயரில் வாழ்ந்துவிடு..ஓ...
ஓ..ஓ..ஓ...

ஆண்:  சந்தர்ப்பமே தீமை செய்தால் சந்தோஷமே ஏது..
சல்லடையில் தண்ணீர் அள்ளி தாகம் தீராது..
தாகம் தீரத்தானோ நீ தாய்ப்பால் மழையாய் வந்தாய்..
நம் உறவின் பெயரே தெரியாதம்மா உயிரை தருகின்றாய்..
உன் உச்சந்தலையை தீண்ட 
ஓர் உரிமை உண்டா பெண்ணே..
உன் உள்ளங்காலில் தலையை சாய்த்தால் போதும் கண்ணே..
ஓ..ஓ...ஓ...ஓ

எந்த பக்கம் காணும்போதும் வானம் ஒன்று..
நான்  எந்த பாதை ஏறும் போதும் ஊர்கள் ஒன்று..
நீ தாவி தாவி தழுவும்போதும் தாய்மை உண்டு..
நான் நெஞ்சாங்கூட்டில் சாயும் போதும் நேர்மை உண்டு..
உன் வார்த்தைக்கு முன்னால் 
என் வாழ்வே உன் பின்னால்
உன் மடியில் எந்தன் கண்ணீர் வழியுமடி
உன் சோகம் ஒரு மேகம்
நான் சொன்னால் அது போகும்..
உன் கண்ணீர் ஏந்தும் கன்னம் நான் ஆகும்..