MUNDHINAM PAARTHENE
முன்தினம் பார்த்தேனே
Movie: Vaaranam aayiram
Singers:Naresh iyer, prashanthini
Music director: Harris jayaraj
ஆண்: முன்தினம் பார்த்தேனே.. பார்த்ததும் தோற்றேனே..
சல்லடை கண்ணாக நெஞ்சமும் புண்ணானதே..
இத்தனை நாளாக..உன்னை நான் பாராமல்..
எங்குதான் போனேனோ..நாட்களும் வீணானதே..
வானத்தில் நீ வெண்ணிலா...
ஏக்கத்தில் நான் தேய்வதா..
இப்போதே என்னோடு வந்தாலென்ன..
ஊர் பார்க்க ஒன்றாக சென்றாலென்ன..
இப்போதே என்னோடு வந்தாலென்ன..
ஊர் பார்க்க ஒன்றாக சென்றாலென்ன..
முன்தினம் பார்த்தேனே.. பார்த்ததும் தோற்றேனே..
சல்லடை கண்ணாக நெஞ்சமும் புண்ணானதே..
இத்தனை நாளாக..உன்னை நான் பாராமல்..
எங்குதான் போனேனோ..நாட்களும் வீணானதே..
ஆண்: துலா தட்டில் உன்னை வைத்து.. நிகர் செய்ய பொன்னை வைத்தால்..
துலாபாரம் தோற்காதோ பேரழகே..
பெண்: முகம் பார்த்து பேசும் உன்னை.. முதல் காதல் சிந்தும் கண்ணை..
அணைக்காமல் போவேனோ..ஆருயிரே...
ஆண்: ஓ..நிழல் போல விடாமல் உன்னை தொடர்வேனடி..
புகை போல படாமல் பட்டு நகர்வேனடி..
வினா நூறு..கனாவும் நூறு..
விடை சொல்லடி..
பெண்: முன்தினம் பார்த்தேனே.. பார்த்ததும் தோற்றேனே..
சல்லடை கண்ணாக உள்ளமும் புண்ணானதே..
இத்தனை நாளாக..உன்னை நான் பாராமல்..
எங்குதான் போனேனோ..நாட்களும் வீணானதே..
கடல் நீலம் மங்கும் நேரம்..அலை வந்து தீண்டும் தூரம்..
மனம் சென்று மூழ்காதோ ஈரத்திலே..
ஆண்: தலை சாய்க்க தோளும் தந்தாய்..
விரல் கோர்த்து பக்கம் வந்தாய்..
இதழ் மட்டும் இன்னும் ஏன் தூரத்திலே..
பெண்: பகல் நேரம் கனாக்கள் கண்டேன் உறங்காமலே..
உயிர் ரெண்டும் உராய கண்டேன் நெருங்காமலே..
உனையன்றி எனக்கு ஏது எதிர்காலமே..
ஆண்: முன்தினம் பார்த்தேனே.. பார்த்ததும் தோற்றேனே..
சல்லடை கண்ணாக நெஞ்சமும் புண்ணானதே..
இத்தனை நாளாக..உன்னை நான் பாராமல்..
எங்குதான் போனேனோ..நாட்களும் வீணானதே..
வானத்தில் நீ வெண்ணிலா...
ஏக்கத்தில் நான் தேய்வதா..
இப்போதே என்னோடு வந்தாலென்ன..
ஊர் பார்க்க ஒன்றாக சென்றாலென்ன..
இப்போதே என்னோடு வந்தாலென்ன..
ஊர் பார்க்க ஒன்றாக சென்றாலென்ன..
............
Songs lyrics from Vaaranam aayiram movie:-
