MANNIPAYA

   மன்னிப்பாயா..


Movie: Vinnaithandi varuvaya

Singers: Shreyaghoshal,                     A.r.rahman 

Music director: A.r.rahman 


பெண்: கடலினில் மீனாக இருந்தவள் நான்..
உனக்கென கரை தாண்டி வந்தவள் தான்..
துடித்திருந்தேன் தரையினிலே..
திரும்பிவிட்டேன் கடலிடமே..

ஒருநாள்..சிரித்தேன்..
மறுநாள்..வெறுத்தேன்..
உனை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே..
மன்னிப்பாயா..மன்னிப்பாயா.. மன்னிப்பாயா...

ஒருநாள் சிரித்தேன்..மறுநாள் வெறுத்தேன்..
உனை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே..
மன்னிப்பாயா..மன்னிப்பாயா..
மன்னிப்பாயா..மன்னிப்பாயா..
மன்னிப்பாயா...

ஆண்: கண்ணே..தடுமாறி நடந்தேன்..
நூலில் ஆடும் மழையாகி போனேன்..
உன்னால் தான் கலைஞனாய் ஆனேனே..
தொலைதூரத்தின் வெளிச்சம் நீ..
உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே..
மேலும்.. மேலும்.. உருகி.. உருகி..
உனை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன்..
ஓ..ஓஓ...உனை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன்..

பெண்:  ஓடும்.. நீரில்..ஓர் அலை தான் நான்..
உள்ளே உள்ள ஈரம் நீதான்..
வரம் கிடைத்தும் நான் தவறவிட்டேன்.. மன்னிப்பாயா..அன்பே ..

 ஆண்: காற்றிலே ஆடும் காகிதம் நான்
நீதான் என்னை கடிதம் ஆக்கினாய்..
அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன்..
என் கலங்கரை விளக்கமே..

ஒருநாள் சிரித்தேன்..மறுநாள் வெறுத்தேன்..
உனை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே..
மன்னிப்பாயா..மன்னிப்பாயா..
மன்னிப்பாயா..மன்னிப்பாயா..
மன்னிப்பாயா...
                                      
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்..
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்..
ஆர்வலர் புண்கணீர் பூசல் தரும்..
அன்பிலார் எல்லாம் தமக்குரியர்..
அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு
புலம்பல் என சென்றேன் புல்லினேன் நெஞ்சம்
 கலத்தல் உறுவது கண்டு..

 பெண்: ஏன்..என் வாழ்வில் வந்தாய்.. கண்ணா நீ..
போவாயோ..கானல் நீர் போலே தோன்றி..
அனைவரும் உறங்கிடும் இரவெனும் நேரம்..
எனக்கது தலையணை நனைத்திடும் ஈரம்..

ஒருநாள் சிரித்தேன்..மறுநாள் வெறுத்தேன்..
உனை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே..
மன்னிப்பாயா..மன்னிப்பாயா..
மன்னிப்பாயா..மன்னிப்பாயா...

ஆண்: கண்ணே..தடுமாறி நடந்தேன்..
நூலில் ஆடும் மழையாகி போனேன்..
உன்னால் தான் கலைஞனாய் ஆனேனே..
தொலைதூரத்தில் வெளிச்சம் நீ..
உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே..

மேலும்.. மேலும்.. உருகி.. உருகி..
உனை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன்..
மேலும்.. மேலும்.. உருகி.. உருகி..
உனை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன்..
ஓ...உனை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன்..



.................



Songs lyrics from Vinnai thandi varuvaya movie: