VANDHAI AYYA

 வந்தாய் ஐயா




Movie: Bahubali 2: the conclusion

Singers: Kaala bhairava

Music director: M.M. Keeravani


மேற்கை ஏற்காதே வீழும் சூரியனே..
தர்மம் தோற்காதே ஆளும் காவலனே..

மேற்கை ஏற்காதே வீழும் சூரியனே..
தர்மம் தோற்காதே ஆளும் காவலனே..
கசிந்திடும் கண்ணீரை திரும்பிட செய் ஐயா..
வறண்டிடும் நெஞ்சத்தில் மழையென பெய் ஐயா..
ஆழ் மனதினில் சூழும் இருளை நீளும் துயரை பாழும் விதியை நீக்கும் தீயே நீ ஐயா..
வந்தாய் ஐயா வந்தாய் ஐயா..
வாழ்வை மீண்டும் தந்தாய் ஐயா..
வந்தாய் ஐயா வந்தாய் ஐயா..
வாழ்வை மீண்டும் தந்தாய் ஐயா..

நீ வீற்றிடும் தோரணையாலே பாறைகளும் அரியாசனமாய்..
உன் பேரை தம்மில் தாமே செதுக்கிடும் கல்வெட்டாய்..
காற்றோடு உன் குரல் கேட்டால் பொட்டல் காடும் அரசவையாய்..
உன் வேர்வை ஒரு  துளி பட்டால் ஒளிருது நெல் பட்டாய்..
உன் சொல்லே சட்டம் ஐயா..
உன் பார்வை சாசனம் ஐயா..
என் சிந்தை நீயே எந்தை நீயே சேயும் நீயே
எங்கள் ஆயுள் நீ கொள் ஐயா..

வந்தாய் ஐயா வந்தாய் ஐயா..
வாழ்வை மீண்டும் தந்தாய் ஐயா..
வந்தாய் ஐயா வந்தாய் ஐயா..
வாழ்வை மீண்டும் தந்தாய் ஐயா..