THOTTABETTA KULIRU

 தொட்டபெட்டா குளிரு

Movie: Unnidathil ennai koduthen

Singers: Hariharan

Music director: S.A.Rajkumar

தொட்டபெட்டா குளிரு தொட்டு தொட்டு என்ன சுட்டுவிட்டு போகிறதே..
ஸ்டிக்கர் பொட்டு போல ஒட்டிக்கிட்ட மனசு சிக்கிக்கிட்டு தவிக்கிறதே..
மொட்டு விட்ட ஒரு கட்டழக பாத்து  நெஞ்சில் லப்புடப்பு நின்னாச்சு..
மின்னல் அடிக்கிற வெண்மைய பாத்து லிட்டர் லிட்டரா வேர்த்தாச்சு..
சீவ வேணும் கலையிற மனச சீப்பு நீதான் வா பாப்பா..
துவட்ட வேணும் நனையுற வயச டர்க்கி டவலும் நீதான்ப்பா..

புல்வெளியில் புல்வெளியில் பூ ஒன்னு நடக்குது யே..
 என் விழியில் என் விழியில் வெடி வெடிக்குது யே..
வெட்கத்திலே வெட்கத்திலே ஸ்ட்ராபெர்ரி சிரிக்குது யே..
சிரிப்பினிலே சிரிப்பினிலே சிம்ஃபனி கேக்குது யே..
கண்களில் சூமை போட்டு உந்தன் அழகை கண்டேன் நானடி..
மனசுக்கு உள்ளே ரூமை போட்டு அழைத்திட வந்தேன் நானடி..
சீவ வேணும் கலையிற மனச சீப்பு நீதான் வா பாப்பா..

தொட்டபெட்டா குளிரு தொட்டு தொட்டு என்ன சுட்டுவிட்டு போகிறதே..
ஸ்டிக்கர் பொட்டு போல ஒட்டிக்கிட்ட மனசு சிக்கிக்கிட்டு தவிக்கிறதே..

இதயத்திலே இதயத்திலே குதிரைகள் ஓடுது யே...
குதிரையிலே குதிரையிலே ரைடிங் போவது நீயே..
மிதந்து வரும் பர்ஃப்யூமில் கனவுகள் பிறக்குது யே..
நடந்து வரும் ஹைஹீல்சில் இதயம் வழுக்குது யே..
வண்ணத்துபூச்சி வண்ணம் எல்லாம் மழையில் சாயம் போகுமா..
நனைந்திட தானே இளமையே..
ஒதுங்கிட நினைத்தால் நியாயமா..