MALLIGAI POOVE MALLIGAI POOVE
மல்லிகை பூவே
Movie: Unnidathil ennai koduthen
Singers: P.Unni krishnan, Sujatha
Music director: S.A.Rajkumar
பெண்: மல்லிகை பூவே மல்லிகை பூவே பார்த்தாயா..
பொன்மாலை எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா..
மல்லிகை பூவே மல்லிகை பூவே பார்த்தாயா..
பொன்மாலை எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா..
பொன்மாலை எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா..
ஆயிரம் கோடிகள் செல்வம் அது யாருக்கு இங்கே வேண்டும்..
அரை நொடி என்றால் கூட இந்த ஆனந்தம் ஒன்றே போதும்..
பூவே எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா..
வெண்பூவே எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா..
ஆண்: மல்லிகை பூவே மல்லிகை பூவே பார்த்தாயா..
பொன்மாலை எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா..
பெண்: சின்ன சின்ன கைகளிலே வண்ணம் சிந்தும் ரோஜாப்பூ..
சிரித்து பேசி விளையாடும் நெஞ்சம் எங்கும் மத்தாப்பு..
ஆண்: இன்னும் அந்தி வானில் பச்சைக்கிளி கூட்டம் என்ன சொல்லி பறக்கிறது..
பெண்: நம்மை கண்டு நாணி இன்னும் கொஞ்ச தூரம் தள்ளி தள்ளி போகிறது..
ஆண்: எங்களின் கதை கேட்டு தலை ஆட்டுது தாமரைப்பூ..
பெண்: மயிலே நாம் ஆடிய கதையை நீ பேசு..
ஆண்: மல்லிகை பூவே மல்லிகை பூவே பார்த்தாயா..
பெண்: பொன்மாலை எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா..
ஆண்: அலைகள் வந்து மோதாமல் கடலின் கரைகள் கிடையாது..
எந்த அலைகள் வந்தாலும் எங்கள் சொந்தம் உடையாது..
பெண்: சுற்றி சுற்றி வருதே பட்டு தென்றல் காற்று இங்கு என்ன பார்க்கிறது..
ஆண்: மொட்டு விடும் மலரை காஞ்சி பட்டு நூலில் கட்டி தர கேட்கிறது..
பெண்: வேலிகள் கிடையாது எந்த வெள்ளமும் நெருங்காது..
ஆண்: நிலவே இது கொஞ்சும் கிளிகளின் இசைப்பாட்டு..
பெண்: மல்லிகை பூவே மல்லிகை பூவே பார்த்தாயா..
பொன்மாலை எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா..
ஆண்: பொன்மாலை எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா..
பெண்: ஆயிரம் கோடிகள் செல்வம் அது யாருக்கு இங்கே வேண்டும்..
ஆண்: அரை நொடி என்றால் கூட இந்த ஆனந்தம் ஒன்றே போதும்..
பூவே எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா..
பெண்: வெண்பூவே எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா..
....................
Songs lyrics from Unnidathil ennai koduthen movie: