KAATRUKKU THOODHU VITTU

காற்றுக்கு தூது விட்டு



Movie: Unnidathil ennai koduthen

Singers: P.Unni krishnan, K.S.Chithra

Music director: S.A.Rajkumar


பெண்: காற்றுக்கு தூது விட்டு கவிதைகள் பாட சொல்லு..
நிலவுக்கு தூதுவிட்டு தீபங்கள் ஏற்ற சொல்லு..
யாருமில்லாத ஆள் என்று பூமியில் யாரும் இல்லை..
கிழக்கு வெளுக்காத நாள் என்று இதுவரை வந்ததில்லை..

ஆண்: காற்றுக்கு தூது விட்டு கவிதைகள் பாட சொல்லு..
நிலவுக்கு தூதுவிட்டு தீபங்கள் ஏற்ற சொல்லு..

பெண்: துள்ளி துள்ளி ஓடலாம் மான்களாக ஆகலாம் பூவனங்கள் போகலாமா..

ஆண்: முள்ளில்லாத பூக்களில் சுற்றுலாக்கள் போகவே வண்டு போல மாறலாமா..

பெண்: கோடைக்காலம் தீர்ந்தாச்சு சோகம் ஓடி போயாச்சு..
சொந்தங்கள் புதுசாச்சு..

ஆண்: காட்டு மூங்கில் குழலாச்சு காற்றும் கூட சேர்ந்தாச்சு..
கற்பனை நிஜமாச்சு..

பெண்: ஒளிந்திருந்த புன்னகை இன்று ஒவ்வொரு நிமிஷமும் வெளியாச்சு..
முகம் மறைத்த மேகங்கள் விலகி முழுமதி  வெளியே வந்தாச்சு..

ஆண்: காற்றுக்கு தூது விட்டு கவிதைகள் பாட சொல்லு..
நிலவுக்கு தூதுவிட்டு தீபங்கள் ஏற்ற சொல்லு..

பெண்: வெண் புறாக்கள் கூட்டமே எங்களோடு கூட்டணி சேர்ந்து கொள்ள வேண்டுகின்றதே..

ஆண்: வெட்டுகின்ற மின்னலோ சற்று நேரம் நின்றதே கையெழுத்து வாங்கி சென்றதே.. 

பெண்: பூமி எங்கும் வலைவீசு நம்மை போல ஆளேது
நினைத்தால் இனிக்கிறது..

ஆண்: சொந்தமாக ஒரு வீடு நிலவில் வாங்கு என்னோடு 
சிறகுகள் முளைக்க விடு..

பெண்: இமை இருக்கிற துணையில் தானே விழிகள் இங்கே இருக்கிறது..

ஆண்: நிலம் இருக்கிற துணையில் தானே வேர்கள் இங்கே வளர்கிறது..

பெண்: காற்றுக்கு தூது விட்டு கவிதைகள் பாட சொல்லு..

ஆண்: நிலவுக்கு தூதுவிட்டு தீபங்கள் ஏற்ற சொல்லு..

பெண்: யாருமில்லாத ஆள் என்று பூமியில் யாரும் இல்லை..

ஆண்: கிழக்கு வெளுக்காத நாள் என்று இதுவரை வந்ததில்லை..