ANANDHA KUYILIN PAATU
ஆனந்த குயிலின் பாட்டு
Movie: Kadhalukku mariyadhai
Singers: Malaysia vasudevan, Arunmozhi, S.N.Surendar , K.S.Chithra, Deepika
Music director: Ilayaraja
ஆனந்த குயிலின் பாட்டு தினம் எங்களின் வீட்டுக்குள்ளே..
பூக்களில் நனையும் காற்று தினம் எங்களின் தோட்டத்திலே..
கிளிகளின் கூண்டுக்குள்ளே புது உலகம் பிறந்ததே..
அன்பு கொண்ட நெஞ்சுக்குள்ளே ஒரு வானம் விரிந்ததே..
கனிகள் தித்திப்பா கவிதை தித்திப்பா..
அது அன்பை விட தித்திப்பா..
பெண்: ஆனந்த குயிலின் பாட்டு தினம் எங்களின் வீட்டுக்குள்ளே..
பூக்களில் நனையும் காற்று தினம் எங்களின் தோட்டத்திலே..
ஆண்: பூமி எங்கும் கண்டதில்லை பாசத்தை உன் போலே..
பெண்: வேறெதுவும் தேவையில்லை அன்புக்கு முன்னாலே..
ஆண்: நெஞ்சுக்குள்ளே பூ மலரும் வீட்டுக்குள் வந்தாலே..
பெண்: நிம்மதியில் கண் வளரும் பாட்டுக்கள் தந்தாலே..
ஆண்: இந்த சொந்தங்கள் போதுமே..
எங்கள் இன்பங்கள் கூடுமே..
பெண்: அன்பென்னும் தீபம் ஏற்றிய வீடும் தெய்வத்தின் ஆலயம் தான்..
ஆண்: வீடு என்றால் மோட்சம் என்றால் வீடு கண்டோம் நேசத்திலே..
பெண்: அன்பினிலே அன்பினிலே ஆலயம் கண்டேனே..
அண்ணன்களின் கைகளிலே தீபமும் நான் தானே..
ஆண்: பாசத்திலே வாசம் தரும் பூவனம் நீதானே..
நேசத்திலே ராகம் தரும் வீணையும் நீதானே..
பெண்: சிலர் வேதம் பாடலாம்..
சிலர் கீதை தேடலாம்..
நான் கண்ட வேதம் நான் கண்ட கீதம் அண்ணன்களின் வார்த்தைகள் தான்..
ஆண்: வானில் நிலா தேய்ந்திடலாம் பாச நிலா தேய்ந்திடுமோ..
பெண்: ஆனந்த குயிலின் பாட்டு..
ஆண்: தினம் எங்களின் வீட்டுக்குள்ளே..
பெண்: பூக்களில் நனையும் காற்று..
ஆண்: தினம் எங்களின் தோட்டத்திலே..
பெண்: கிளிகளின் கூண்டுக்குள்ளே புது உலகம் பிறந்ததே..
அன்பு கொண்ட நெஞ்சுக்குள்ளே ஒரு வானம் விரிந்ததே..
ஆண்: கனிகள் தித்திப்பா கவிதை தித்திப்பா..
அது அன்பை விட தித்திப்பா..
ஆ&பெ: ஆனந்த குயிலின் பாட்டு தினம் எங்களின் வீட்டுக்குள்ளே..
பூக்களில் நனையும் காற்று தினம் எங்களின் தோட்டத்திலே..
......................
Songs lyrics from Kadhalukku mariyadhai movie:
