PENNE NEEYUM PENNA
பெண்ணே நீயும் பெண்ணா
Movie: Priyamana thozhi
Singers: Unni menon, Kalpana ragavendar
Music director: S.A.Rajkumar
ஆண்:பெண்ணே நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம்..
ரெண்டே ரெண்டு கண்ணா ஒவ்வொன்றும் காவியம்..
ஒரு மூன்றாம் பிறையை சுற்றி தங்க ஜரிகை நெய்த நெற்றி..
பனிப்பூக்கள் தேர்தல் வைத்தால் அடி உனக்கே என்றும் வெற்றி..
பிரம்மன் செய்த சாதனை உன்னில் தெரிகிறது..
உன்னை எழுதும் போது தான் மொழிகள் இனிக்கிறது..
பெண்ணே நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம்..
ரெண்டே ரெண்டு கண்ணா ஒவ்வொன்றும் காவியம்..
ஆண்: புறா இறகில் செய்த புத்தம் புதிய மெத்தை..
உந்தன் மேனி என்று உனக்கு தெரியுமா..
பெண்: சீன சுவரை போலே எந்தன் காதல் கூட..
இன்னும் நீளமாகும் உனக்கு தெரியுமா..
ஆண்: பூங்கா என்ன வாசம் என்று உந்தன் மீது தெரியும்..
பெண்: தங்கம் என்ன வண்ணம் என்று உன்னை பார்க்க தெரியும்..
காதல் வந்த பின்னாலே கால்கள் ரெண்டும் காற்றில் செல்லும்..
ஆண்: கம்பன் ஷெல்லி சேர்ந்து தான் கவிதை எழுதியது..
எந்தன் முன்பு வந்து தான் பெண்ணாய் நிற்கிறது..
பெண்ணே நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம்..
ரெண்டே ரெண்டு கண்ணா ஒவ்வொன்றும் காவியம்..
பெண்: மழை வந்த பின்னால் வானவில்லும் தோன்றும்..
உன்னை பார்த்த பின்னால் மழை தோன்றுதே..
ஆண்: பூக்கள் தேடி தானே பட்டாம்பூச்சி பறக்கும்..
உன்னை தேடி கொண்டு பூக்கள் பறந்ததே..
பெண்: மின்னும் விந்தை என்ன என்று மின்னல் உன்னை கேட்கும்..
ஆண்: எங்கே தீண்ட வேண்டும் என்று தென்றல் உன்னை கேட்கும்..
உன்னை பார்த்த பூவெல்லாம் கையெழுத்து கேட்டு நிற்கும்..
பெண்: நீதான் காதல் நூலகம் சேர்ந்தேன் புத்தகமாய்..
நீதான் காதல் பூமழை நனைவேன் பத்திரமாய்..
ஆண்: பெண்ணே நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம்..
ரெண்டே ரெண்டு கண்ணா ஒவ்வொன்றும் காவியம்..
பெண்: அரை நொடி தான் என்னை பார்த்தாய்..
ஒரு யுகமாய் தோன்ற வைத்தாய்..
பனித்துளியாய் நீயும் வந்தாய்..
பாற்கடலாய் நெஞ்சில் நின்றாய்..
ஆண்: பிரம்மன் செய்த சாதனை உன்னில் தெரிகிறது..
உன்னை எழுதும் போது தான் மொழிகள் இனிக்கிறது..
.......................
Songs lyrics from Priyamana thozhi movie:
