MAANKUTTIYE
மான் குட்டியே
Movie: Priyamana thozhi
Singers: Hariharan, sujatha
Music director: S.A.Rajkumar
ஆண்: மான்குட்டியே புள்ளி மான்குட்டியே..
உன் மேனி தான் ஒரு பூந்தொட்டியே..
உன் கொழு கொழு கன்னங்கள் பார்த்து என் மனசுல தெருகூத்து..
உன் ரவிக்கையின் ரகசியம் பார்த்து என் நெஞ்சுல புயல் காத்து..
பெண்: மான்குட்டியே புள்ளி மான்குட்டியே..
என் மேனி தான் ஒரு பூந்தொட்டியே..
பெண்: உன்னால உன்னால எம்மனசு உன்னால..
தறியில் ஓடும் நாடா போல ஏன் ஓடுது அது ஏன் ஓடுது..
ஆண்: ஒன்னால ஒன்னால ஒன்னோட நெனப்பால..
கண்ணுக்குள்ள மெளகா வத்தல் ஏன் காயுது அது ஏன் காயுது..
பெண்: இது பஞ்சலோக மேனி பஞ்சு தலகாணி மேல வந்து ஏன் விழுந்த..
ஆண்: நீ செக்க செக்க செவந்த குங்குமத்த கலந்த வண்ணத்துல ஏன் பொறந்த..
பெண்: நீயும் நானும் தான் ஒன்னா திரியுறோம்..
ஆண்: தீயே இல்லையே ஆனா எரியுறோம்..
பெண்: மான்குட்டியே புள்ளி மான்குட்டியே..
ஆண்: உன் மேனி தான் ஒரு பூந்தொட்டியே..
ஆண்: ஒன்னோடும் என்னோடும் ஒடம்பாடு வேர்த்தாலும்
வேர்த்திடாத இடமும் உண்டு நீ சொல்லணும் அத நீ சொல்லணும்..
பெண்: ஆணோடும் பெண்ணோடும் வேர்க்காத எடம் என்ன
உதட்டு மேல வேர்க்காதய்யா நீ நம்பணும் அத நீ நம்பணும்..
ஆண்: நீ அங்க கொஞ்சம் காட்டி இங்க கொஞ்சம் பூட்டி பாதி உயிர் எடுக்காதே..
பெண்: என்ன கட்டி கட்டி புடிக்க கண்ட எடம் கடிக்க உத்தரவு கேட்காதே..
ஆண்: அசந்தா போதுமே அரைச்சு பார்க்கலாம்..
பெண்: கசந்தா போய்விடும் கலந்தே பார்க்கலாம்..
ஆண்: மான்குட்டியே புள்ளி மான்குட்டியே..
ஒன் மேனி தான் ஒரு பூந்தொட்டியே..
பெண்: என் கொழு கொழு கன்னங்கள் பார்த்து உன் மனசுல தெருகூத்து..
என் ரவிக்கையின் ரகசியம் பார்த்து உன் நெஞ்சுல புயல் காத்து..
ஆண்: மான்குட்டியே புள்ளி மான்குட்டியே..
உன் மேனி தான் ஒரு பூந்தொட்டியே..
.......................
Songs lyrics from Priyamana thozhi movie:
