KAATRE POONGRATRE
காற்றே பூங்காற்றே
Movie: Priyamana thozhi
Singers: K.S.Chithra
Music director: S.A.Rajkumar
காற்றே பூங்காற்றே ஒரு கவிதை சொல்வாயா..
விண்ணில் செல்ல தான் உன் சிறகுகள் தருவாயா..
தென்றலாய் வருகிறேன் பூக்களாய் பூக்க வா..
வார்த்தையாய் வருகிறேன் பாடலாய் பாட வா..
காற்றே பூங்காற்றே ஒரு கவிதை சொல்வாயா..
விண்ணில் செல்ல தான் உன் சிறகுகள் தருவாயா..
நதி என்பது ஓர் நாள் கடல் என்பதை சேரும்..
எப்போதுமே ஓடும் நதியாகலாம்..
ரோஜாச்செடி போலே நீ பூக்கலாம் இங்கே..
காற்றோடு போராடும் குணம் வேண்டுமே..
அட உள்ளங்கையால் சூரியனை மூடிட முடியாதே..
ஒரு பறவை மோதி கோபுரம் தான் சாய்ந்திட கூடாதே..
தோழனே தோழனே..
ஓவியன் கை வலி சித்திரம் ஆகுது..
ஒவ்வொரு வலியிலும் சாதனை உள்ளது..
காற்றே பூங்காற்றே ஒரு கவிதை சொல்வாயா..
விண்ணில் செல்ல தான் உன் சிறகுகள் தருவாயா..
புயல் வீசுமே என்று கரையோரமாய் நின்று
அணை கட்டினால் அது ஓய்வதில்லை..
மழை தூறுமே என்று நடுவானிலே வந்து
திரை கட்டினால் மழை முடிவதில்லை..
எரிமலையின் மேலே தண்ணீர் ஊற்றி அணைத்திட முடியாது..
ஒரு மின்னல் கீற்றை நூலில் கட்டி நிறுத்திட இயலாது..
உன்னை யார் வெல்வது..
சிப்பியின் பொறுமை தான் முத்து போல் மின்னுது..
இலைகளின் சக்தி தான் கனிகளை தாங்குது..
காற்றே பூங்காற்றே ஒரு கவிதை சொல்வாயா..
விண்ணில் செல்ல தான் உன் சிறகுகள் தருவாயா..
தென்றலாய் வருகிறேன் பூக்களாய் பூக்க வா..
வார்த்தையாய் வருகிறேன் பாடலாய் பாட வா..
.......................
Songs lyrics from Priyamana thozhi movie:
