RAJADHI RAJA UN THANDHIRANGAL

 ராஜாதிராஜா உன் தந்திரங்கள்




Movie: Mannan  

Singers: S.P.Balasubramaniam,  Swarnalatha 

Music director: Ilayaraja 


பெண்: ராஜாதிராஜா உன் தந்திரங்கள்..
நிற்காமல் கூத்தாடும் பம்பரங்கள்..

ஆண்: மாயாஜாலம் என்ன
மையல் கொண்டு நீயும் நாளும் ஆட்டம் போடவா..

பெண்: நேரம் காலம் என்ன
நேசம் கொண்டு நீயும் காதல் தோட்டம் போடவா..

ஆண்: ஹே ராணி என்னோடு ஆட வா நீ..

பெண்: பூமேனி கொண்டாடும் வெண்பனி..

எந்நாளும் ராஜாதிராஜா உன் தந்திரங்கள்..
நிற்காமல் கூத்தாடும் பம்பரங்கள்..

ஆண்: மான் கூட்டம் மீன் கூட்டம் வேடிக்கை பார்க்கின்ற கண்ணிரண்டிலே என்ன மயக்கம்..

பெண்: மாமாங்கம் ஆனாலும் மன்னா உன் மார் சேர்ந்து சின்ன மலர் தான் சிந்து படிக்கும்..

ஆண்: கையோடு கை சேரும் கல்யாண வைபோகம் 
கண்டு களிக்கும் காலம் பிறக்கும்..

பெண்: மேள சத்தம் கேட்பதெந்த தேதியோ..
லால லால லால லால லாலலா..

ஆண்: தேவனுக்கு சொந்தம் இந்த தேவியோ..
லால லால லால லால லாலலா..

பெண்: காதும் காதுமாய்..

ஆண்: காதல் மந்திரம்..

பெண்: ஓதுகின்ற மன்னன் அல்லவோ எந்நாளும் இங்கு ..

ராஜாதிராஜா உன் தந்திரங்கள்..
நிற்காமல் கூத்தாடும் பம்பரங்கள்..

பெண்: நின்றாலும் சென்றாலும் பின்னோடு எந்நாளும் வந்த நிழலே வண்ண மயிலே..

ஆண்: தொட்டாலும் பட்டாலும் முத்தாரம் இட்டாலும் என்ன சுகமே என்ன சுவையே..

பெண்: உன் மேனி பொன் மேனி இந்நாளும் எந்நாளும் 
என்னை மயக்க  தன்னை மறக்க..

ஆண்: ஓடை மீது ஓடம் போல ஆடவா..
லால லால லால லால லாலலா..

பெண்: உன்னையன்றி யாரும் இல்லை ஆடவா..
லால லால லால லால லாலலா..

ஆண்: காதல் கன்னிகை..

பெண்: காமன் பண்டிகை..

ஆண்: காணுகின்ற காலமல்லவா எந்நாளும் இங்கு..

பெண்: ராஜாதிராஜா உன் தந்திரங்கள்..
நிற்காமல் கூத்தாடும் பம்பரங்கள்..

ஆண்: மாயாஜாலம் என்ன மையல் கொண்டு நீயும் 
நாளும் ஆட்டம் போடவா..

பெண்: நேரம் காலம் என்ன நேசம் கொண்டு நீயும் 
காதல் தோட்டம் போடவா..

ஆண்: ஹே ராணி என்னோடு ஆட வா நீ..

பெண்: பூமேனி கொண்டாடும் வெண்பனி..

எந்நாளும் ராஜாதிராஜா உன் தந்திரங்கள்..
நிற்காமல் கூத்தாடும் பம்பரங்கள்..