TELEPHONE MANIPOL

 டெலிஃபோன்  மணிப்போல்



Movie: Indian 

Singers: Hariharan,  Harini,  Srinivas 

Music director: A.R.Rahman   


ஆண்: டெலிஃபோன் மணிப்போல் சிரிப்பவள் இவளா..
மெல்போர்ன் மலர் போல் மெல்லிய மகளா..
டிஜிட்டலில் செதுக்கிய குரலா..
எலிசபெத் டெய்லர் மகளா..
சாகிர் ஹுசைன் தபலா இவள்தானா..
சோனா.. சோனா..
இவள் அங்கம் தங்கம் தானா..
சோனா..சோனா..
இவள் லேட்டஸ்ட் செல்லுலார் ஃபோனா..
கம்ப்யூட்டர் கொண்டிவளை அந்த பிரம்மன் படைத்தானா..

டெலிஃபோன் மணிப்போல் சிரிப்பவள் இவளா..
மெல்போர்ன் மலர் போல் மெல்லிய மகளா..

பெண்: நீ இல்லை என்றால் வெயிலும் அடிக்காது 
துளி மழையும் இருக்காது..
நீ இல்லை என்றால் சந்திரன் இருக்காது 
ஒரு சம்பவம் எனக்கேது..

ஆண்: உன் பேரை சொன்னால் சுவாசம் முழுதும் சுகவாசம்  வீசுதடி..
உன்னை பிரிந்தாலே வீசும் காற்றில் வேலை நிறுத்தமடி..

பெண்: நீரில்லை என்றால் அருவி இருக்காது 
மலை அழகு இருக்காது..
நீ இல்லாமல் போனால் இதயம் இருக்காது 
என் இளமை பசிக்காது..

ஆண்: வெள்ளை நதியே உன்னுள் என்னை தினம் மூழ்கி ஆடவிடு..
வெட்கம் வந்தால் கூந்தல் கொண்டு உனை கொஞ்சம் மூடிவிடு..

டெலிஃபோன் மணிப்போல் சிரிப்பவள் இவளா..
மெல்போர்ன் மலர் போல் மெல்லிய மகளா..

ஆண் : உன் பேரை யாரும் சொல்லவும் விட மாட்டேன் 
அந்த சுகத்தையும் தர மாட்டேன்..
உன் கூந்தல் பூக்கள் விழவே விட மாட்டேன்..
அதை வெயிலில் விட மாட்டேன்..

பெண்: பெண்கள் வாசம் என்னை தவிர இனி வீசக்கூடாது..
அன்னை தெரசா அவரை தவிர பிறர் பேசக்கூடாது..

ஆண்: நீ போகும் தெருவில் ஆண்களை விடமாட்டேன்..
சில பெண்களை விட மாட்டேன்..
நீ சிந்தும் சிரிப்பை காற்றில் விட மாட்டேன்..
அதை கவர்வேன் தரமாட்டேன்..

பெண்: புடவை கடையில் பெண்ணின் சிலையை நீ தீண்ட கூடாது..
காதல் கோட்டை கற்புக்கரசா நீ தாண்ட கூடாது..

ஆண்: டெலிஃபோன் மணிப்போல் சிரிப்பவள் இவளா..
மெல்போர்ன் மலர் போல் மெல்லிய மகளா..
டிஜிட்டலில் செதுக்கிய குரலா..
எலிசபெத் டெய்லர் மகளா..
சாகிர் ஹுசைன் தபலா இவள்தானா..
சோனா.. சோனா..
இவள் அங்கம் தங்கம் தானா..
சோனா..சோனா..
இவள் லேட்டஸ்ட் செல்லுலார் ஃபோனா..
கம்ப்யூட்டர் கொண்டிவளை அந்த பிரம்மன் படைத்தானா..