MAYA MACHINDRA
மாயா மச்சிந்த்ரா
Movie: Indian
Singers: S.P.Balasubramaniam, Swarnalatha
Music director: A.R.Rahman
பெண்: மாயா மச்சிந்த்ரா மச்சம் பார்க்க வந்தீரா..
மாயங்கள் காட்டி மோசம் செய்யும் மாவீரா..
ஆண்: மாறன் கலைக்கூடம் மஞ்சத்தில் உருவாக்கும் மேஸ்த்திரி.. காதல் சாஸ்த்திரி..
பெண்: மார்பில் விளையாட மன்னன் கை விசை போட ராத்திரி.. அடச்சீ போக்கிரி..
ஆண்: உருமாறி உருமாறி ஓவியப்பெண் உனை தேடி வருவேனே வாரி தருவேனே..
பெண்: தடை தாண்டும் படை வீரா
உடையாக அணிவீரா தம்புரா மீட்டும் கிங்கரா..
ஆண்: உனை நானும் அடையாது
விழி வாசல் அடையாது கஞ்சிரா தட்ட கொஞ்சிரா..
ஆண்: மாயா மச்சிந்த்ரா மச்சம் பார்க்க வந்தாரா..
மாயங்கள் காட்டி..
பெண்: மோசம் செய்யும் மாவீரா..
பெண்: உன்னை நான் சந்தித்தால் உள்ளத்தில் தித்தித்தை..
தகதிமி தகதிமி தாளம்..
ஆண்: உன்னை நான் சிந்தித்தால் உண்டாகும் தித்திப்பை..
உதடுக்குள் பொத்தி வைப்பேன் நானும்..
பெண்: பொத்தி வைத்த தித்திப்பை நீ தந்தால் என்ன..
முத்தமிட்டு சர்க்கரை நோய் வந்தால் என்ன..
ஆண்: தினமும் தினமும் வரலாமா..
தவணை முறையில் தரலாமா..
சொல்லடி சோன் பப்படி..
பெண்: செயலில் இறங்கு சீக்கிரமா..
மீனம் மேஷம் பாக்கணுமா..
மென்னுடா என்னை தின்னுடா..
ஆண்: மாயா மச்சிந்த்ரா மச்சம் பார்க்க வந்தாரா..
பெண்: மாயங்கள் காட்டி மோசம் செய்யும் மாவீரா..
பெண்: அன்பே என் பேரென்ன நான் வாழும் ஊரென்ன..
அறியாமல் உன்னை கேட்டேன் நானே..
ஆண்: பெண்ணே என் பேச்செங்கே நான் வாங்கும் மூச்செங்கே..
புரியாமல் தவிக்கின்றேன் மானே..
பெண்: காதலுக்கு கேள்வி கேட்டு மாளாதய்யா..
காமனுக்கு தாமதங்கள் ஆகாதய்யா..
ஆண்: கனலில் பனியாய் கரைவோமா..
கரைந்தே கவிதை வரைவோமா..
சுட்டியே கன்னுக்குட்டியே..
பெண்: உனையும் எனையும் புனைவோமா..
உலக படமாய் தருவோமா..
ஹஜ்ஜிமா செல்ல புஜ்ஜிமா..
ஆண்: மாயா மச்சிந்த்ரா மச்சம் பார்க்க வந்தாரா..
மாயங்கள் காட்டி மோசம் செய்யும் மாவீரா..
....................