GURUVAYURAPPA
குருவாயூரப்பா
Movie: Pudhu pudhu arthangal
Singers: S.P.Balasubramaniam, Chithra
Music director: Ilayaraja
ஆண்: குருவாயூரப்பா குருவாயூரப்பா..
குருவாயூரப்பா குருவாயூரப்பா..
நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி..
பெண்: குருவாயூரப்பா குருவாயூரப்பா..
வேண்டாத தெய்வம் இல்லை நீதானே பாக்கி..
ஆண்: ராதை உனக்கு சொன்ன வேதமென்ன..
நான் போகும் பாதை எந்நாளும் உன் பாதை..
ராதை உனக்கு சொன்ன வேதமென்ன..
நான் போகும் பாதை எந்நாளும் உன் பாதை..
பெண்: குருவாயூரப்பா குருவாயூரப்பா..
நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி..
ஆண் : தேனாற்றங்கரையில் தெய்வீக குரலில்..
நான் தான் ஒரு பாட்டிசைத்தேன்..
பெண்: தினந்தோறும் இரவில் நடுஜாமம் வரையில்..
நான் தானே அதை கேட்டிருந்தேன்..
ஆண்: அரங்கேற்றம் தான் ஆகாமல் தான்..
அலைபாயும் என் ஜீவன் தான்..
பெண்: வா வா என் தேவா செம்பூவா என் தேகம்
சேராதோ உன் கைகளிலே..
ஆண்: குருவாயூரப்பா குருவாயூரப்பா..
நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி..
பெண்: ஏகாந்த நினைவும் எரிகின்ற நிலவும்..
என் மேல் ஒரு போர் தொடுக்க..
ஆண்: எனை வந்து தழுவு ஏன் இந்த பிரிவு..
மானே வா உனை யார் தடுக்க..
பெண்: பரிமாறலாம் பசியாறலாம்..
பூமாலை நீ சூடும் நாள்..
ஆண்: மாது உன் மீது இப்போது என் மோகம்
பாயாதோ சொல் பூங்குயிலே..
ஆண்: குருவாயூரப்பா குருவாயூரப்பா..
நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி..
பெண்: குருவாயூரப்பா குருவாயூரப்பா..
வேண்டாத தெய்வம் இல்லை நீதானே பாக்கி..
ஆண்: ராதை உனக்கு சொன்ன வேதமென்ன..
நான் போகும் பாதை எந்நாளும் உன் பாதை..
பெண்: குருவாயூரப்பா குருவாயூரப்பா..
நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி..
ஆண்: நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி..
....................
Songs lyrics from pudhu pudhu arthangal movie: