ELLARUM MAAVAATTA

 எல்லாரும் மாவாட்ட




Movie: Pudhu pudhu arthangal

Singers:   S.P.Balasubramaniam , Sailaja

Music director: Ilayaraja   


ஆண்: ஐய்யாரே ஐய்யாரே ஐய்யாரே..
ஒய்யாரே ஒய்யாரே  ஒய்யாரே..

எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்..
இதில் எப்போதும் தப்பில்ல ஒத்துக்கிடணும்..

பெண்: எல்லார்க்கும் எல்லாமும் தெரிஞ்சிருந்தா..
அது இல்லாத நேரத்தில் கை கொடுக்கும்..

ஆண்: ஹோய் ஹோய் எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்..
இதில் எப்போதும் தப்பில்ல ஒத்துக்கிடணும்..

பெண்: ஆமா எல்லார்க்கும் எல்லாமும் தெரிஞ்சிருந்தா..
அது இல்லாத நேரத்தில் கை கொடுக்கும்..

ஆண்: M.Aயும் B.Aயும்..
வேல இல்லாம ஈ ஓட்டுறான்..
அன்னாடம் வாழ்க்கை ஓட மாவாட்டுறான்..

ஐய்யாரே ஐய்யாரே ஐய்யாரே..
அர ஒய்யாரே ஒய்யாரே  ஒய்யாரே..
ஐய்யாரே ஐய்யாரே ஐய்யாரே..
அர ஒய்யாரே ஒய்யாரே  ஒய்யாரே..

பெண்: ஆத்திரத்திலே தான் பாத்திரமும் தேச்சி தேச்சி தேஞ்சி போச்சி 
தேச்சி வைக்கிறதே

ஆண்: சாத்திரத்திலே தான் சொன்ன சொல்லு பிரிச்சி பிரிச்சி படிச்சி படிச்சி 
முழிச்சி நிக்கிறதே 

பெண்: ஆக்கி வைக்கிறத நித்தம் நித்தம் மோப்பம் புடிக்க முழுங்கி முழுங்கி பாக்கி வைக்கிறதே..

ஆண்: சோறு விக்குறவன் விக்கையிலே கூவிக்கூவி குரலு வறண்டு தொண்டை விக்குறதே..

பெண்: ஆவோஜி ஆவ் சர்தார்ஜி பையா பையா 
ஆவோஜி ஆவ் ஆவ்..

ஆண்: காவோஜி காவ் சுல்தான்ஜி பையா பையா 
காவோஜி காவ் காவ்..

ஆ&பெ: எல்லாரும் இப்போ இங்கே பாய் பாய் ஜெய்ஹிந்த் போலோ..

ஐய்யாரே ஐய்யாரே ஐய்யாரே..
ஒய்யாரே ஒய்யாரே  ஒய்யாரே..

ஆண்: அரே எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்..
இதில் எப்போதும் தப்பில்ல ஒத்துக்கிடணும்..

ஆண்: மீனு விக்குறவன் சின்ன இட அலுக்கி குலுக்கி  மினுக்கி தளுக்கி 
ஒதுங்கி நிக்கிறதே..

பெண்: டாவடிக்கிறவன் கண்ணு ரெண்டும் மிரட்டி விரட்டி தொரத்தி தொரத்தி 
டைவ் அடிக்கிறதே..

ஆண்: ரவிக்கை தைக்கிறவன் கட்டழக மொறைச்சி மொறைச்சி வெரைக்க வெரைக்க அளவெடுக்கிறதே..

பெண்: தாலி கட்டினவன் பார்த்து புட்டு அடிச்சி புடிச்சி அவள இழுத்து நடைய கட்டுறதே..

ஆண்: ஆவோஜி ஆவ் சர்தார்ஜி பையா பையா 
ஆவோஜி ஆவ் ஆவ்..

பெண்: காவோஜி காவ் சுல்தான்ஜி பையா பையா 
காவோஜி காவ் காவ்..

ஆ&பெ: எல்லாரும் இப்போ இங்கே பாய் பாய் ஜெய்ஹிந்த் போலோ..

ஆண்: போலோ.. எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்..
இதில் எப்போதும் தப்பில்ல ஒத்துக்கிடணும்..

பெண்: எல்லார்க்கும் எல்லாமும் தெரிஞ்சிருந்தா..
அது இல்லாத நேரத்தில் கை கொடுக்கும்..

ஆண்: M.Aயும் B.Aயும்..
வேல இல்லாம ஈ ஓட்டுறான்..
அன்னாடம் வாழ்க்கை ஓட மாவாட்டுறான்..

ஆண்: எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்..
இதில் எப்போதும் தப்பில்ல ஒத்துக்கிடணும்..
எல்லார்க்கும் எல்லாமும் தெரிஞ்சிருந்தா..
அது இல்லாத நேரத்தில் கை கொடுக்கும் கேட்டோ..