MUDHAL MURAI KILLI PARTHEN

 முதல்முறை கிள்ளி பார்த்தேன் 


Movie: Sangamam

Singers: Srinivas,  sujatha mohan 

Music director: A.R.Rahman 


பெண்: முதல்முறை கிள்ளி பார்த்தேன்..
முதல்முறை கண்ணில் வேர்த்தேன்..
எந்தன் தாயின் கர்ப்பம் தாண்டி..
மறுமுறை  உயிர் கொண்டேன்..
உன்னால் இருமுறை உயிர் கொண்டேன்..

முதல்முறை கிள்ளி பார்த்தேன்..
முதல்முறை கண்ணில் வேர்த்தேன்..
எந்தன் தாயின் கர்ப்பம் தாண்டி..
மறுமுறை உயிர் கொண்டேன்..
உன்னால் இருமுறை உயிர் கொண்டேன்..

முதல் முறை எனக்கு அழுதிட தோன்றும் ஏன்..
கண்ணீருண்டு சோகமில்லை.. 
ஆமாம் மழையுண்டு மேகமில்லை..

பெண்: கால்களில் கிடந்த சலங்கையை திருடி 
அன்பே என் மனசுக்குள் கட்டியதென்ன..

ஆண்: சலங்கைகள் அணிந்தும் சத்தங்களை மறைத்தாய்..
பெண்ணே உன் உள்ளம் தன்னை ஒளித்ததென்ன..

பெண்: விதையொன்று உயிர்க்கொள்ள 
வெப்பம் காற்று ஈரம் வேண்டும்..
காதல் வந்து உயிர் கொள்ள..
காலம் கூட வேண்டும்..

ஆண்: ஒரு விதை உயிர் கொண்டது.. 
ஆனால் இரு நெஞ்சில் வேர் கொண்டது..
சலங்கையே கொஞ்சம் பேசு..
மௌனமே பாடல் பாடு..
மொழியெல்லாம் ஊமை ஆனால் கண்ணீர் உரையாடும்..
அதில் கவிதை அரங்கேறும்..
   
பெண்: பாதையும் தூரம் நான் ஒரு பாரம்.. 
என்னை உன் எல்லை வரை கொண்டு செல்வாயா..

ஆண்: உடலுக்குள் இருக்கும் உயிர் ஒரு சுமையா..
பெண்ணே உன்னை நானும் விட்டு செல்வேனா..

பெண்: தந்தை தந்த உயிர் தந்தேன்..
தாய் தந்த உடல் தந்தேன்..
உறவுகள் எல்லாம் சேர்த்து உன்னிடம் கண்டேன்..

ஆண்: மொத்தத்தையும் நீ கொடுத்தாய்..
ஆனால் முத்தத்துக்கோர் நாள் குறித்தாய்..

பெண்: முதல்முறை கிள்ளி பார்த்தேன்..
முதல்முறை கண்ணில் வேர்த்தேன்..
எந்தன் தாயின் கர்ப்பம் தாண்டி..
மறுமுறை  உயிர் கொண்டேன்..
உன்னால் இருமுறை உயிர் கொண்டேன்..

முதல் முறை எனக்கு அழுதிட தோன்றும் ஏன்..
கண்ணீருண்டு சோகமில்லை..
ஆமாம் மழையுண்டு மேகமில்லை..