PORAALE PONNUTHAAYI

 போறாளே பொன்னுத்தாயி



Movie:  Karuthamma

Singers: Unni menon,  sujatha mohan 

Music director: A.R.Rahman 


ஆண்: போறாளே பொன்னுத்தாயி போகிற போக்கில் மனச தொட்டு
தர பாக்கும் கதிர போல வெக்க பட்டு..

பெண்: போறாளே பொன்னுத்தாயி..
புழுதி காட்டில் மனச விட்டு..
உள்ளூரு பொல்லாப்புக்கு கட்டுபட்டு..

ஆண்: வெள்ளாம நீதான்..
வெள்ளாடு நான்தான்..
வெட்கத்த விட்டு தள்ளம்மா..

பெண்: வெள்ளாம காட்ட விட்டு தர மாட்டா 
பண்பாட கட்டி காக்கும் பட்டிகாட்டு கருத்தம்மா..

ஆண்: போறாளே பொன்னுத்தாயி போகிற போக்கில் மனச தொட்டு
தர பாக்கும் கதிர போல வெக்க பட்டு..

பெண்: போறாளே பொன்னுத்தாயி..
புழுதி காட்டில் மனச விட்டு..
உள்ளூரு பொல்லாப்புக்கு கட்டுபட்டு..

ஆண்: படிக்காத புள்ள மனசெல்லாம் வெள்ள..
இவளது நாக்குல போக்குல மனசில கள்ளமில்ல..

பெண்: உன் மேல கிறுக்கு உள்ளூர இருக்கு..
வாய் விட்டு சொல்லத்தானே தோது இல்லை தோது  இல்லை..
வைகைக்கு கடல சேர யோகமில்ல  யோகமில்ல..

ஆண்: அது சரி வியாழனும் வெள்ளியும் இருப்பது தூரமில்ல..

ஆண்: போறாளே பொன்னுத்தாயி போகிற போக்கில் மனச தொட்டு
தரை பாக்கும் கதிர போல வெக்க பட்டு..

பெண்: போறாளே பொன்னுத்தாயி..
புழுதி காட்டில் மனச விட்டு..
உள்ளூரு பொல்லாப்புக்கு கட்டுபட்டு..

ஆண்: வெள்ளாம நீதான்..
வெள்ளாடு நான்தான்..
வெட்கத்த விட்டு தள்ளம்மா..

பெண்: வெள்ளாம காட்ட விட்டு தர மாட்டா 
பண்பாட கட்டி காக்கும் பட்டிகாட்டு கருத்தம்மா..

ஆண்: போறாளே பொன்னுத்தாயி போகிற போக்கில் மனச தொட்டு
தரை பாக்கும் கதிர போல வெக்க பட்டு..

பெண்: நீ கண்ட வள்ளி சப்பாத்தி கள்ளி..
கள்ளியின் இலையிலும் காயிலும் கனியிலும் முள்ளிருக்கும்..

ஆண்: அடி போடி கள்ளி நீதான்டி அல்லி..
கண்டாங்கி சேலை கட்டும் கண்ணகியே கண்ணகியே..
உன் கொசுவத்தில் உசுர கட்டி கொல்லுறியே கொல்லுறியே..

பெண்: வர வர பொம்பள பொழப்பையே வம்புல மாட்டுறியே..

பெண்: போறாளே பொன்னுத்தாயி..

ஆண்: போறாளே பொன்னுத்தாயி..

பெண்: புழுதி காட்டில் மனச விட்டு..
உள்ளூரு பொல்லாப்புக்கு கட்டுபட்டு..

ஆண்: கட்டுபட்டு..
  
பெண்: போறாளே பொன்னுத்தாயி..
புழுதி காட்டில் மனச விட்டு..
உள்ளூரு பொல்லாப்புக்கு கட்டுபட்டு..

ஆண்: வெள்ளாம நீதான்..
வெள்ளாடு நான்தான்..
வெட்கத்த விட்டு தள்ளம்மா..

பெண்: வெள்ளாம காட்ட விட்டு தர மாட்டா 
பண்பாட கட்டி காக்கும் பட்டிகாட்டு கருத்தம்மா..

ஆண்: போறாளே பொன்னுத்தாயி போகிற போக்கில் மனச தொட்டு
தரை பாக்கும் கதிர போல வெக்க பட்டு..

பெண்: போறாளே பொன்னுத்தாயி..
புழுதி காட்டில் மனச விட்டு..
உள்ளூரு பொல்லாப்புக்கு கட்டுபட்டு..

  
   




......................






Songs lyrics from Karuthamma Movie: