ORU KAL ORU KANNADI
ஒரு கல் ஒரு கண்ணாடி
Movie: Siva manasula sakthi
Singers: Yuvan Shankar raja
Music director: Yuvan Shankar raja
ஆண்: ஒரு கல் ஒரு கண்ணாடி உடையாமல் மோதிகொண்டால் காதல்..
ஒரு சொல் சில மௌனங்கள் பேசாமல் பேசி கொண்டால் காதல்..
கண்கள் ரெண்டில்.. காதல் வந்தால்..ஓ..
கண்ணீர் மட்டும்.. துணையாகுமே..ஓ..
ஒரு கல் ஒரு கண்ணாடி உடையாமல் மோதிகொண்டால் காதல்..
ஒரு சொல் சில மௌனங்கள் பேசாமல் பேசி கொண்டால் காதல்..
திமிருக்கு மறுபெயர் நீதானே..
தினம் தினம் உன்னால் இறந்தேனே..
மறந்திட மட்டும் மறந்தேனே..
தீயென புரிந்தும் அடி நானே..
திரும்பவும் உனை தொட வந்தேனே..
தெரிந்தே சுகமாய் எரிந்தேனே..
கடும் விஷத்தினை எடுத்து குடித்தாலும்..
அடி கொஞ்ச நேரம் கழித்தே உயிர் போகும்..
இந்த காதலிலே உடனே உயிர் போகும்..
காதல் என்றால் பெண்ணே சித்ரவதை தானே..
ஒரு கல் ஒரு கண்ணாடி உடையாமல் மோதிகொண்டால் காதல்..
ஒரு சொல் சில மௌனங்கள் பேசாமல் பேசி கொண்டால் காதல்..
உன் முகம் பார்த்தே நான் எழுவேன்..
உன் குரல் கேட்டால் நான் அறிவேன்..
உன் நிழல் உடனே நான் வருவேன்..
புன்னகை செய்தால் உயிர் வாழ்வேன்..
புறக்கணித்தால் நான் என்னாவேன்..
பெண்ணே எங்கே நான் போவேன்..
உன் உதட்டுக்குள் இருக்கும் ஒரு வார்த்தை..
அதை சொல்லி விட்டால் தொடங்கும் என் வாழ்க்கை..
உன் மௌனத்தில் இருக்கும் எண்ண வலிகள்..
காதல் என்றால் மெல்ல சாதல் என்று சொல்ல..
ஒரு கல் ஒரு கண்ணாடி உடையாமல் மோதிகொண்டால் காதல்..
ஒரு சொல் சில மௌனங்கள் பேசாமல் பேசி கொண்டால் காதல்..
கண்கள் ரெண்டில்.. காதல் வந்தால்..ஓ..
கண்ணீர் மட்டும்.. துணையாகுமே..ஓ..
ஒரு கல் ஒரு கண்ணாடி உடையாமல் மோதிகொண்டால் காதல்..
ஒரு சொல் சில மௌனங்கள் பேசாமல் பேசி கொண்டால் காதல்..
.....................
Songs lyrics from siva manasula sakthi movie: