UN PERAE THERIYADHU

 உன் பேரே தெரியாது



Movie: Engeyum eppodhum  

Singers: Madhusree,  Sudha ragunathan

Music director:  C. Sathya 


உன் பேரே தெரியாது..
உன்னை கூப்பிட முடியாது..
நான் உனக்கோர் பேர் வைத்தேன்..
உனக்கே தெரியாது..
அந்த பேரை அறியாது..
அட யாரும் இங்கேது..
அதை ஒருமுறை சொன்னாலே..
தூக்கம் வாராது..
அட தினந்தோறும் அதை சொல்லி உன்னை கொஞ்சுவேன்..
நான் அடங்காத அன்பாலே உன்னை மிஞ்சுவேன்..

ஓ சூடான பேரும் அதுதான்..
சொன்னவுடன் உதடுகள் கொதிக்கும்..
சூரியனை நீயும் நினைத்தால் அது இல்லையே..
ஓ ஜில்லென்ற பேரும் அதுதான்..
கேட்டவுடன் நெஞ்சம் குளிரும்..
நதியென்று நீயும் நினைத்தால் அது இல்லையே..
சிலிர்க்கவைக்கும் தெய்வமில்லை..
மிரள வைக்கும் மிருகம் இல்லை..
ஒளிவட்டம் தெரிந்தாலும் அது பட்டப்பேர் இல்லை..
என் பேரின் பின்னால் வரும் பேர் நான் சொல்லவா..

பெரிதான பேரும் அதுதான்..
சொல்ல சொல்ல மூச்சே வாங்கும்..
எத்தனை எழுத்துக்கள் என்றால் விடை இல்லையே..
சிறிதான பேரும் அதுதான்..
சட்டென்று முடிந்தே போகும்..
எப்படி சொல்வேன் நானும்..
மொழி இல்லையே..
சொல்லிவிட்டால் உதடு ஒட்டும்..
எழுதிவிட்டால் தேனும் சொட்டும்..
அது சுத்த தமிழ் பெயர்தான்..
அயல் வார்த்தை அதில் இல்லை..
என் பேரின் பின்னால் வரும் பேர் நான் சொல்லவா..

உன் பேரே தெரியாது..
உன்னை கூப்பிட முடியாது..
நான் உனக்கோர் பேர் வைத்தேன்..
உனக்கே தெரியாது..
அட தினந்தோறும் அதை சொல்லி உன்னை கொஞ்சுவேன்..
நான் அடங்காத அன்பாலே உன்னை மிஞ்சுவேன்..




......................





Songs lyrics from Engeyum eppodhum  movie: