MINNALE NEE VANDHADHENDI
மின்னலே நீ வந்ததேனடி
Movie: May maadham
Singers: S.P.Balasubramaniam
Music director: A.R.Rahman
மின்னலே நீ வந்ததேனடி..
என் கண்ணிலே ஒரு காயம் என்னடி..
என் வானிலே நீ மறைந்து போன மாயம் என்னடி..
சில நாழிகை நீ வந்து போனது..
என் மாளிகை அது வெந்து போனது..
மின்னலே என் வானம் உன்னை தேடுதே..
மின்னலே நீ வந்ததேனடி..
என் கண்ணிலே ஒரு காயம் என்னடி..
என் வானிலே நீ மறைந்து போன மாயம் என்னடி..
சில நாழிகை நீ வந்து போனது..
என் மாளிகை அது வெந்து போனது..
மின்னலே என் வானம் உன்னை தேடுதே
கண் விழித்து பார்த்தபோது கலைந்த வண்ணமே..
உன் கைரேகை ஒன்று மட்டும் நினைவு சின்னமே..
கண் விழித்து பார்த்தபோது கலைந்த வண்ணமே..
உன் கைரேகை ஒன்று மட்டும் நினைவு சின்னமே..
கதறி கதறி எனது உள்ளம் உடைந்து போனதே..
இன்று சிதறிப்போன சில்லில் எல்லாம் உனது பிம்பமே..
கண்ணீரில் தீ வளர்த்து காத்திருக்கிறேன்..
உன் காலடி தடத்தில் நான் பூத்திருக்கிறேன்..
மின்னலே நீ வந்ததேனடி..
என் கண்ணிலே ஒரு காயம் என்னடி..
என் வானிலே நீ மறைந்து போன மாயம் என்னடி..
சில நாழிகை நீ வந்து போனது..
என் மாளிகை அது வெந்து போனது..
மின்னலே என் வானம் உன்னை தேடுதே
பால் மழைக்கு காத்திருக்கும் பூமி இல்லையா..
ஒரு பண்டிகைக்கு காத்திருக்கும் சாமி இல்லையா..
பால் மழைக்கு காத்திருக்கும் பூமி இல்லையா..
ஒரு பண்டிகைக்கு காத்திருக்கும் சாமி இல்லையா..
வார்த்தை வர காத்திருக்கும் கவிஞன் இல்லையா..
நான் காத்திருந்தால் காதல் இன்னும் நீளும் இல்லையா..
கண்ணீரில் தீ வளர்த்து காத்திருக்கிறேன்..
உன் காலடி தடத்தில் நான் பூத்திருக்கிறேன்..
மின்னலே நீ வந்ததேனடி..
என் கண்ணிலே ஒரு காயம் என்னடி..
என் வானிலே நீ மறைந்து போன மாயம் என்னடி..
சில நாழிகை நீ வந்து போனது..
என் மாளிகை அது வெந்து போனது..
மின்னலே என் வானம் உன்னை தேடுதே
.......................
Songs lyrics from may maadham movie: