EN MEL VIZHUNDHA MAZHAITHULIYE

 என் மேல் விழுந்த



Movie: May maadham

Singers: P.Jayachandran, K.S.Chithra 

Music director: A.R.Rahman 


ஆண்: என் மேல் விழுந்த மழைத்துளியே..
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்..
இன்று எழுதிய என் கவியே..
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்..

பெண்: என் மேல் விழுந்த மழைத்துளியே..
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்..
இன்று எழுதிய என் கவியே..
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்..

ஆண்: என்னை எழுப்பிய பூங்காற்றே.. இத்தனை நாளாய் எங்கிருந்நாய் ..
என்னை மயக்கிய மெல்லிசையே.. இத்தனை நாளாய் எங்கிருந்தாய்..

பெண்: உடம்பில் உறைகின்ற ஓர் உயிர் போல்..
உனக்குள் தானே நான் இருந்தேன்..

ஆண்: என் மேல் விழுந்த மழைத்துளியே..
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்..

பெண்: இன்று எழுதிய என் கவியே..
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்..

பெண்: மண்ணை திறந்தால் நீர் இருக்கும்..
என் மனதை திறந்தால் நீ இருப்பாய்..

ஆண்: ஒலியை திறந்தால் இசை இருக்கும்..
என் உயிரை திறந்தால் நீ இருப்பாய்..

பெண்: வானம் திறந்தால் மழை இருக்கும்..
என் வயதை திறந்தால் நீ இருப்பாய்..

ஆண்: இரவை திறந்தால் பகல் இருக்கும்..
என் இமையை திறந்தால் நீ இருப்பாய்..

பெண்: என் மேல் விழுந்த மழைத்துளியே..
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்..
இன்று எழுதிய என் கவியே..
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்..

பெண்: இலையும் மலரும் உரசுகையில்.. என்ன பாஷை பேசிடுமோ..

ஆண்: அலையும் கரையும் உரசுகையில்.. பேசும் பாஷை பேசிடுமோ..

பெண்: மண்ணும் விண்ணும் உரசுகையில்..
என்ன பாஷை பேசிடுமோ..

ஆண்: பார்வை ரெண்டும் பேசிக்கொண்டால்..
பாஷை ஊமை ஆய்விடுமோ..

பெண்: என் மேல் விழுந்த மழைத்துளியே..
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்..
இன்று எழுதிய என் கவியே..
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்..

ஆண்: என் மேல் விழுந்த மழைத்துளியே..
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்..
இன்று எழுதிய என் கவியே..
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்..

பெண்: என்னை எழுப்பிய பூங்காற்றே இத்தனை நாளாய் எங்கிருந்நாய் ..
என்னை மயக்கிய மெல்லிசையே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்..

ஆண்: உடம்பில் உறைகின்ற ஓர் உயிர் போல்..
உனக்குள் தானே நான் இருந்தேன்..

பெண்: என் மேல் விழுந்த மழைத்துளியே..
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்..
இன்று எழுதிய என் கவியே..
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்..




  

.......................





Songs lyrics from may maadham movie: