MEENAMMA

 மீனம்மா


Movie: Aasai  

Singers:  P.Unni krishnan,  Anuradha sriram 

Music director: Deva 


ஆண்: மீனம்மா...
அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே..

பெண்: அம்மம்மா...
முதல் பார்வையிலே சொன்ன வார்த்தை எல்லாம் ஒரு காவியமே..

ஆண்: சின்ன சின்ன ஊடல்களும்.. சின்ன சின்ன மோதல்களும்..
மின்னல் போல வந்து வந்து போகும்..

பெண்: மோதல் வந்து ஊடல்  வந்து முட்டி கொண்ட போதும்
இங்கு காதல் மட்டும் காயமின்றி வாழும்..

ஆண்: இது மாதங்கள் நாட்கள் செல்ல..ஆஆ..
நிறம் மாறிடும் பூக்கள் அல்ல..ஆஆஆ..

ஆண்: மீனம்மா...
அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே..

ஆண்: ஒரு சின்ன பூ திரியில் ஒளி சிந்தும் ராத்திரியில்
இந்த மெத்தை மேல் இளம் தத்தை போல் 
புது வித்தை காட்டிடவா..

பெண்: ஒரு ஜன்னல் அங்கிருக்கு..
தென்றல் எட்டி பார்ப்பதற்க்கு..
அதை மூடாமல் தாழ் போடாமல்..
எனை தொட்டு தீண்டுவதா..

ஆண்: மாமன்காரன் தானே..
மாலை போட்ட நானே..
மோகம் தீரவே மெதுவாய் மெதுவாய் தொடலாம்..
மீனம்மா...
மழை உன்னை நனைத்தால்..
இங்கு எனக்கல்லவா குளிர் காய்ச்சல் வரும்..

பெண்: அம்மம்மா..
வெயில் உன்னை அடித்தால்..
இங்கு எனக்கல்லவா உடல் வேர்த்து விடும்..

ஆண்: அன்று காதல் பண்ணியது..
உந்தன் கன்னம் கிள்ளியது..
அடி இப்போதும் நிறம் மாறாமல் இந்த நெஞ்சில் நிற்கிறது..

பெண்: அங்கு பட்டு சேலைகளும்..
நகை நட்டும் பாத்திரமும்..
உனை கேட்டேனே சண்டை போட்டேனே அது கண்ணில் நிற்கிறது..

ஆண்: ஜாதி மல்லிப்பூவே..
தங்க வெண்ணிலாவே..
ஆசை தீரவே பேசலாம் முதல் நாள் இரவு..

ஆண்: மீனம்மா...
உன்னை நேசிக்கவும்..
அன்பை வாசிக்கவும் தென்றல் காத்திருக்கு..

பெண்: அம்மம்மா..
உன்னை காதலித்து..
புத்தி பேதலித்து புஷ்பம் பூத்திருக்கு..

ஆண்: உன்னை தொட்ட தென்றல் வந்து என்னை தொட்டு என்னென்னவோ
சங்கதிகள் சொல்லிவிட்டு போக..

பெண்: உன் மனமும் என் மனமும் ஒன்றையொன்று ஏற்றுக்கொண்டு 
ஒப்பந்தத்தில் கையெழுத்து போட..

ஆண்: இன்று மோகனம் பாட்டெடுத்தோம்..ஆ...
முழு மூச்சுடன் காதலித்தோம்..ஆ....

ஆண்: மீனம்மா...
அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே..





.....................





Songs lyrics from  Aasai  movie: