KONJA NAAL PORU THALAIVA

 கொஞ்ச நாள் பொறு தலைவா



Movie: Aasai  

Singers:  Hariharan 

Music director: Deva 


ஆண்: கொஞ்ச நாள் பொறு தலைவா..
ஒரு வஞ்சிக்கொடி இங்கே வருவா..
கண்ணிரண்டில் போர் தொடுப்பா..
அந்த வெண்ணிலவ தோற்கடிப்பா..

கொஞ்ச நாள் பொறு தலைவா..
ஒரு வஞ்சிக்கொடி இங்கே வருவா..
கண்ணிரண்டில் போர் தொடுப்பா..
அந்த வெண்ணிலவ தோற்கடிப்பா..
காமாட்சி மீனாட்சி என்ன பேரோ நானறியேன்..
தென்னாடோ எந்நாடோ எந்த ஊரோ நானறியேன்..

ராசாத்தி ராசாத்தி அட்ரஸ் என்ன கண்டுபிடி..
ராவோடு ராவாக அள்ளி வர நாங்க ரெடி..

ஓ நேத்துக்கூட தூக்கத்தில..
பாத்தேன் அந்த பூங்குயில..
தூத்துகுடி முத்தெடுத்து..
கோர்த்துவெச்ச மாலை போல..
வேர்த்து கொட்டி கண் விழிச்சு பார்த்தா..
அவ ஓடிப்போனா உச்சிமலக்காத்தா..
சொப்பனத்தில் இப்படிதான் எப்பவுமே வந்து நிற்பா..
சொல்ல போனா பேரழகில் சொக்கதங்கம் போலிருப்பா
வத்திக்குச்சி இல்லாமலே காதல் தீய பத்த வெப்பா..
தேனாறு பாலாறு போல வந்தா கண்ணுக்குள்ள..
தேசிய கொடி போல குத்தி வெச்சேன் நெஞ்சுக்குள்ள..

ராசாத்தி ராசாத்தி அட்ரஸ் என்ன கண்டுபிடி..
ராவோடு ராவாக அள்ளி வர நாங்க ரெடி..

பெண்: பச்சை தாவணி பறக்க..
அங்கு தன்னையே அவன் மறக்க..
வச்ச கண்ணு வாங்கலையே..
என் மாமன் கண்ணு தூங்கலயே..

ஆண்: என்னோடுதான் கண்ணாம்பூச்சி..
என்றும் ஆடும் பட்டாம்பூச்சி..
கட்டாயம் என் காதல் ஆட்சி.
கைகூடும் பார் தென்றல் சாட்சி..
சிந்தனையில் வந்து வந்து போறா..
அவ  சந்தனத்தில் செஞ்சு வச்ச தேரா..
என்னுடைய காதலிய ரொம்ப ரொம்ப பத்திரமா..
எண்ணம் எங்கும் ஒட்டி வச்சேன் வண்ண வண்ண சித்திரமா..
வேறொருத்தி வந்து தங்க எம்மனசு சத்திரமா..
ஆத்தாடி அம்மாடி என்ன சொல்ல கட்டழக..
ஆவாரம் பூவாக வாய் வெடிச்ச மொட்டழக..

ராசாத்தி ராசாத்தி அட்ரஸ் என்ன கண்டுபிடி..
ராவோடு ராவாக அள்ளி வர நாங்க ரெடி..

கொஞ்ச நாள் பொறு தலைவா..
ஒரு வஞ்சிக்கொடி இங்க வருவா..
கண்ணிரண்டில் போர் தொடுப்பா..
அந்த வெண்ணிலவ தோற்கடிப்பா..
அட காமாட்சி மீனாட்சி என்ன பேரோ நானறியேன்..
தென்னாடோ எந்நாடோ எந்த ஊரோ நானறியேன்..

ராசாத்தி ராசாத்தி அட்ரஸ் என்ன கண்டுபிடி..
ராவோடு ராவாக அள்ளி வர நாங்க ரெடி..





.....................





Songs lyrics from  Aasai  movie: