MAY MAASAM

 மே மாசம்


Movie: Jay Jay 

Singers: Suchithra 

Music director: Bharadwaj


மேமாசம் தொண்ணுத்தெட்டில் மேஜர் ஆனேனே..
மேஜர் ஆன நாளாய் நானும் பேஜார் ஆனேனே..
காயா பழமா என்று என் கன்னம் தடவும் சில பேர்..
எறும்பு ஊருது என்று என் இடையை கிள்ளும் சில பேர்..
என் ஆடைகளை தொட்டுப் பார்ப்பது போல் 
சிலர் அங்கம் தொடுகின்றார்..
அட சாலைகளில் உள்ள ரசிகர்கள் எல்லாம் 
ஒரு சங்கம் வைக்கின்றார்..

மேமாசம் தொண்ணுத்தெட்டில் மேஜர் ஆனேனே..

தர்ட்டீன் என்பது அன்லக்கி நம்பர் மேற்கு உலகத்தில்..
தர்ட்டீன் என்பது லக்கி நம்பர் எந்தன் விஷயத்தில்..
தர்ட்டீன் வந்தது ஏதோ நேர்ந்தது மங்கை பருவத்தில்
ஃபோர்ட்டீன் வந்ததும் மாற்றம் வந்தது எந்தன் உருவத்தில்..
அடுத்த வீட்டு பையன் அட அம்பு தொடுத்தான் சும்மா..
கோலம் போட போனால் அடி கூடாதென்றாள் அம்மா..
அட வயசுக்கு ஏன் வந்தேனோ படு தொல்லை அம்மம்மா..
அட வயசுக்கு ஏன் வந்தேனோ படு தொல்லை அம்மம்மா..

மேமாசம் தொண்ணுத்தெட்டில் மேஜர் ஆனேனே..

Fifteen வந்தது மலர்கள் பூத்தன எந்தன் தேகத்தில்..
மலர்கள் எல்லாம் கனியாய் மாறும் மாலை நேரத்தில்..
சிக்ஸ்ட்டீன் வந்ததும் கள்ள பார்வைகள் எந்தன் பாகத்தில்..
பெண்கள் கூட ஆசை கொண்டனர் பள்ளிக்கூடத்தில்..
எத்தனை உள்ளது பெண்ணில்..
ஏன் எதையோ தேட்றீங்க..
எங்கோ போகுது பார்வை..
என்னை வெட்கம் தின்னுது போங்க..
பெண் மார்புக்குள் ஒரு மனசுண்டு மரியாதை பண்ணுங்க..
பெண் மார்புக்குள் ஒரு மனசுண்டு அட அதையும் பாருங்க..

மேமாசம் தொண்ணுத்தெட்டில் மேஜர் ஆனேனே..
மேஜர் ஆன நாளாய் நானும் பேஜார் ஆனேனே..
காயா பழமா என்று என் கன்னம் தடவும் சில பேர்..
எறும்பு ஊருது என்று என் இடையை கிள்ளும் சில பேர்..
என் ஆடைகளை தொட்டுப் பார்ப்பது போல் சிலர் அங்கம் தொடுகின்றார்..
அட சாலைகளில் உள்ள ரசிகர்கள் எல்லாம் ஒரு சங்கம் வைக்கின்றார்..



 
.....................




Songs lyrics from Jay Jay movie: