JEEBOOMBA

 ஜீபூம்பா



Movie: Jay Jay 

Singers: boney  chakravarthy 

Music director: Bharadwaj 


ஜீபூம்பா ஹே ஹே ஜீபூம்பா..
எந்தன் தேவதையை நீ காட்டு..
காட்டினால் காதல் கூட்டினால்..
அவளை கும்பிடுவேன் பூப்போட்டு..
உன்னை நினைத்து பெண்ணே உயிர் இற்று விட்டேனே..
காதலுக்கு தான் என்னை விற்று விட்டேனே..
உன்னை அடைவேன் என்றே எமன் விட்டு வைத்தானே..
உன்னுயிரில் என்னை கட்டி வைத்தானே..
மழையில் நனைந்த காகிதம் போல..
எனது தேகம் ஆகிய போதும்..
உன்னை நான் அடைவது சத்தியம்..

ஜீபூம்பா ஹே ஹே ஜீபூம்பா..
எந்தன் தேவதையை நீ காட்டு..

என் முகத்தை நினைப்பாய்..
அந்த ஏக்கத்தையும் ரசிப்பாய்..
என் உள்ளுணர்வு ஏதோ சொல்லுதடி..
ராத்திரியில் எழுவாய்..
நீ ரகசியமாய் அழுவாய்..
என்ற கற்பனைகள் என்னை கொல்லுதடி..
பாசம் உள்ள மலரே இளந்தளிரே
உன்னை காணாவிடில் விழிகள் குழிகள் தானடி
உன்னை கண்டுபிடிப்பேன் உயிர் இனிப்பேன் அதில் ஐயமில்லை
உலகம் உருண்டை தானடி..
காற்று மண்டலம் ஏறி..
உன்னை மண்ணில் தேடி பார்ப்பேன்..
நீ வேற்று கிரகம் போனால் நான் மாற்று வழியில் வருவேன்..
உன்னை நான் அடைவது சத்தியம்..

இரண்டு கண்கள் இருக்க..
நான் எந்த திசையை அளக்க..
அடி மேலும் சில கண்கள் வேண்டுமடி..
எட்டு கண்கள் இருந்தால்.. 
நான் நான்கு திசைகள் அளப்பேன்..
உன்னை எப்படியும் கண்கள் காணுமடி..
கை அடக்க நிலவே கதிர் அழகே 
நீ எங்கே எங்கே காற்றை அனுப்பி தேடினேன்..
கண் இமைக்கும் பொழுதில் நீ மறைந்தால் 
என்ன ஆகும் என்று தூக்கத்தை தூக்கில் ஏற்றினேன்..
விண்ணில் எறியும் கல்லோ..
அந்த விண்ணை கடப்பதில்லை
மண்ணில் உலவும் நீயோ என்றும் என்னை கடப்பதில்லை..
உன்னை நான் அடைவது சத்தியம்..

ஜீபூம்பா ஹே ஹே ஜீபூம்பா..
எந்தன் தேவதையை நீ காட்டு..
காட்டினால் காதல் கூட்டினால்..
அவளை கும்பிடுவேன் பூப்போட்டு..
உன்னை நினைத்து பெண்ணே உயிர் இற்று விட்டேனே..
காதலுக்கு தான் என்னை விற்று விட்டேனே..
உன்னை அடைவேன் என்றே எமன் விட்டு வைத்தானே..
உன்னுயிரில் என்னை கட்டி வைத்தானே..
மழையில் நனைந்த காகிதம் போல..
எனது தேகம் ஆகிய போதும்..
உன்னை நான் அடைவது சத்தியம்..




  
.....................





Songs lyrics from Jay Jay movie: