MALAI KOVIL VAASALIL
மலைக்கோவில் வாசலில்
Movie: Veera
Singers: Mano, Swarnalatha
Music director: Ilayaraja
பெண்: மலைக்கோயில் வாசலில் கார்த்திகை தீபம் மின்னுதே..
விளக்கேற்றும் வேளையில் ஆனந்த கானம் சொல்லுதே..
முத்து முத்து சுடரே சுடரே
கொடு வேண்டிடும் வரங்களையே..
வண்ண வண்ண கதிரே கதிரே
தொடு ஆயிரம் சுகங்களையே..
முத்து முத்து சுடரே சுடரே
கொடு வேண்டிடும் வரங்களையே..
வண்ண வண்ண கதிரே கதிரே
தொடு ஆயிரம் சுகங்களையே..
ஆண்: மலைக்கோயில் வாசலில் கார்த்திகை தீபம் மின்னுதே..
விளக்கேற்றும் வேளையில் ஆனந்த கானம் சொல்லுதே..
பெண்: நாடகம் ஆடிய பாடகன் ஓ..
நீ இன்று நான் தொடும் காதலன் ஓ..
ஆண்: நீ சொல்ல நான் மெல்ல மாறினேன்..
நன்றியை வாய் விட்டு கூறினேன்..
பெண்: தேர் அழகும் சின்ன பேர் அழகும்..
உன்னை சேராதா..உடன் வாராதா..
ஆண்: மான் அழகும் கெண்டை மீன் அழகும்..
கண்கள் காட்டாதா..இசை கூட்டாதா..
பெண்: பாலாடை இவன் மேலாட..
வண்ண நூலாடை இனி நீயாகும்..
ஆண்: மலைக்கோயில் வாசலில் கார்த்திகை தீபம் மின்னுதே..
விளக்கேற்றும் வேளையில் ஆனந்த கானம் சொல்லுதே..
முத்து முத்து சுடரே சுடரே
கொடு வேண்டிடும் வரங்களையே..
வண்ண வண்ண கதிரே கதிரே
தொடு ஆயிரம் சுகங்களையே..
பெண்: மலைக்கோயில் வாசலில் கார்த்திகை தீபம் மின்னுதே..
ஆண்: நான் ஒரு பூச்சரம் ஆகவோ ஓ..
நீள் குழல் மீதினில் ஆடவோ..ஓ
பெண்: நான் ஒரு மெல்லிசை ஆகவோ..
நாளும் உன் நாவினில் ஆடவோ..
ஆண்: நான் படிக்கும் தமிழ் கீர்த்தனங்கள்..
இங்கு நாள் தோறும் உந்தன் சீர் பாடும்..
பெண்: பூமரத்தில் பசும் பொன் நிறத்தில்..
வளை பூத்தாடும் உந்தன் பேர் பாடும்..
ஆண்: மாக்கோலம் மழை நீர் கோலம்..
வண்ண நாள் காணும் இந்த ஊர்கோலம்..
பெண்: மலைக்கோயில் வாசலில் கார்த்திகை தீபம் மின்னுதே..
ஆண்: விளக்கேற்றும் வேளையில் ஆனந்த கானம் சொல்லுதே..
முத்து முத்து சுடரே சுடரே
கொடு வேண்டிடும் வரங்களையே
வண்ண வண்ண கதிரே கதிரே..
தொடு ஆயிரம் சுகங்களையே
முத்து முத்து சுடரே சுடரே
கொடு வேண்டிடும் வரங்களையே
வண்ண வண்ண கதிரே கதிரே..
தொடு ஆயிரம் சுகங்களையே
ஆ&பெ: மலைக்கோயில் வாசலில் கார்த்திகை தீபம் மின்னுதே..
விளக்கேற்றும் வேளையில் ஆனந்த கானம் சொல்லுதே..
..................
Songs lyrics from Veera movie: