RAASAALI

 ராசாளி



Movie: Accham enbadhu madamaiyada 

Singers: Sathyaprakash,  Sasha tirupati 

Music director:   A.r.rahman 


ஆண்: பறக்கும் ராசாளியே ராசாளியே நில்லு..
இங்கு நீ வேகமா நான் வேகமா சொல்லு..
கடிகாரம் பொய் சொல்லும் என்றே நான் கண்டேன்..
கிழக்கெல்லாம் மேற்காககிட கண்டேனே..

பெண்: பறவை போல் ஆகினேன் போல் ஆகினேன் இன்று..
சிறகும் என் கைகளும் என் கைகளும் ஒன்று..

ஆண்: ராசாளி பந்தயமா..ஆ.. பந்தயமா..
நீ முந்தியா  நான் முந்தியா பார்ப்போம் பார்ப்போம்..
முதலில் யார் சொல்வது யார் சொல்வது அன்பை..
முதலில் யார் எய்வது யார் எய்வதம்பை..
மௌனம் பேசாமலே பேசாமலே செல்ல வாவி நீரில் கமலம் போல் ஆடி  மெல்ல
கனவுகள் வருதே கண்ணின் வழியே
என் தோள் மீது நீ 
நான் குளிர் காய்கின்ற தீ

ஆண்: எட்டுதிசை முட்டும் எனை பகலினில் கொட்டும் 
பனி மட்டும் துணை இரவினில் எட்டும் 
ஒரு பட்டு குரல் மனதினில் மடிவேனோ..
முன்னில் ஒரு காற்றின் கழிமுகத்தினில்
பின்னில் சிறு பச்சைக்கிளி முதுகினில்
வாழ்வில் ஒரு பயணம் இது முடிந்திட விடுவேனோ..

எட்டுதிசை முட்டும் எனை பகலினில் கொட்டும் 
பனி மட்டும் துணை இரவினில் எட்டும்
ஒரு பட்டு குரல் மனதினில் மடிவேனோ..
முன்னில் ஒரு காற்றின் கழிமுகத்தினில்
பின்னில் சிறு பச்சைக்கிளி முதுகினில்
வாழ்வில் ஒரு பயணம் இது முடிந்திட விடுவேனோ..

ஆண்: ராசாளி பந்தயமா ஆ..பந்தயமா.. 
முதலில் யார் சொல்வது யார் சொல்வது அன்பை..
முதலில் யார் எய்வது யார் எய்வதம்பை....

பெண்: வெயில் மழை வெட்கும்படி நனைவதை
விண்மீன்களும் விண்ணாய் எனை தொடர்வதை
ஊருக்கொரு காற்றின் மணம் கமழ்வதை மறவேனே..
முன்னும் இதுபோலே புது அனுபவம் கண்டேன்
என சொல்லும்படி நினைவிலே
இன்னும் எதிர்காலத்திலும் வழி இல்லை மறவேனே..

வெயில் மழை வெட்கும்படி நனைவதை
விண்மீன்களும் விண்ணாய் எனை தொடர்வதை
ஊருக்கொரு காற்றின் மணம் கமழ்வதை மறவேனே..
முன்னும் இதுபோலே புது அனுபவம் கண்டேன்
என சொல்லும்படி நினைவிலே
இன்னும் எதிர்காலத்திலும் வழி இல்லை மறவேனே..

ஆண்: ராசாளி பந்தயமா ஆ பந்தயமா.. 
முதலில் யார் சொல்வது யார் சொல்வது அன்பை..
முதலில் யார் எய்வது யார் எய்வதம்பை..
மௌனம் பேசாமலே பேசாமலே செல்ல.. வாவி நீரில் கமலம் போல் ஆடி  மெல்ல..
கனவுகள் வருதே கண்ணின் வழியே
என் தோள் மீது நீ 
நான் குளிர் காய்கின்ற தீ..
என் தோள் மீது நீ நான் குளிர் காய்கின்ற தீ..
குளிர் காய்கின்ற தீ..
குளிர் காய்கின்ற தீ..




....................



Songs lyrics from achcham enbadhu madamaiyada movie:-