PANI VIZHUM IRAVU
பனி விழும் இரவு
Movie: Mounaragam
Singers: S.P.Balasubramaniam , S.Janaki
Music director: Ilayaraja
ஆண்: பனிவிழும் இரவு..
நனைந்தது நிலவு..
இளங்குயில் இரண்டு..
இசைக்கின்ற பொழுது..
பூப்பூக்கும் ராப்போது
பூங்காற்றும் தூங்காது வா வா வா..
பெண்: பனிவிழும் இரவு..
நனைந்தது நிலவு..
பெண்: பூவிலே ஒரு பாய் போட்டு..
பனித்துளி தூங்க..
ஆண்: பூவிழி இமை மூடாமல்..
பைங்கிளி ஏங்க..
பெண்: மாலை விளக்கேற்றும் நேரம்..
மனசில் ஒரு கோடி பாரம்..
ஆண்: தனித்து வாழ்ந்தென்ன லாபம்..
தேவையில்லாத தாபம்..
பெண்: தனிமையே போ..
இனிமையே வா..
நீரும் வேரும் சேர வேண்டும்..
ஆண்: பனிவிழும் இரவு..
நனைந்தது நிலவு..
ஆண்: காவலில் நிலை கொள்ளாமல் தாவுதே மனது..
பெண்: காரணம் துணையில்லாமல் வாடிடும் வயது..
ஆண்: ஆசை கொல்லாமல் கொல்லும்..
அங்கம் தாளாமல் துள்ளும்
பெண்: என்னை கேட்காமல் ஓடும் இதயம் உன்னோடு கூடும்
ஆண்: விரகமே ஓர் நரகமோ சொல்
பூவும் முள்ளாய் மாறி போகும்
பெண்: பனிவிழும் இரவு..
நனைந்தது நிலவு..
இளங்குயில் இரண்டு..
இசைக்கின்ற பொழுது..
பூப்பூக்கும் ராப்போது
பூங்காற்றும் தூங்காது வா வா வா..
ஆண்: பனிவிழும் இரவு..
நனைந்தது நிலவு..
.....................
Songs lyrics from Mouna raagam Movie:
