NILAAVE VAA
நிலாவே வா
Movie: Mounaragam
Singers: S.P.Balasubramaniam
Music director: Ilayaraja
நிலாவே வா..
செல்லாதே வா..
எந்நாளும் உன் பொன்வானம் நான்..
எனை நீ தான் பிரிந்தாலும் நினைவாலே அணைப்பேன்..
நிலாவே வா..
செல்லாதே வா..
காவேரியா கானல் நீரா பெண்ணே என்ன உண்மை..
முள் வேலியா முல்லை பூவா சொல்லு கொஞ்சம் நில்லு..
அம்மாடியோ நீ தான்..
இன்னும் சிறு பிள்ளை..
தாங்காதம்மா நெஞ்சம்..
நீயும் சொன்ன சொல்லை..
பூந்தேனே.. நீதானே..
சொல்லில் வைத்தாய் முள்ளை..
நிலாவே வா..
செல்லாதே வா..
பூஞ்சோலையில் வாடை காற்றும்..
வாட சந்தம் பாட..
கூடாதென்று கூறும் பூவும்..
ஏது மண்ணின் மீது..
ஒரே ஒரு பார்வை..
தந்தால் என்ன தேனே..
ஒரே ஒரு வார்த்தை..
சொன்னால் என்ன மானே..
ஆகாயம் தாங்காத மேகம் ஏது கண்ணே....
நிலாவே வா..
செல்லாதே வா..
எந்நாளும் உன் பொன்வானம் நான்..
எனை நீ தான் பிரிந்தாலும் நினைவாலே அணைப்பேன்..
நிலாவே வா..
செல்லாதே வா..
எந்நாளும் உன் பொன்வானம் நான்..
.....................
Songs lyrics from Mouna raagam Movie:
