ORU VEETIL

 ஒரு வீட்டில்


Movie:  Theeran adhigaram ondru

Singers: Inno genga, Shasha tirupati 

Music director:   Ghibran 


பெண்: ஒரு வீட்டில் நீயும் நானும் 
ஒன்றாக வாழும் நேரம் 
எதிர்பார்த்தே இருந்தேன் பல காலம் 
இது நாள் வரையில் 
கனவெல்லாம் இனிதாய் நனவாகும்
இரவின் மடியில்

ஆண்: ஒரு வீட்டில் நீயும் நானும் 
ஒன்றாக தூங்கும் நேரம்
எதிர்பார்த்தே எழுந்தேன் தினந்தோறும்
முதல் நாள் வரையில்
இனியெல்லாம் முழுதாய் அரங்கேறும்
விரும்பும் வகையில் 

பெண்: தினம் தினம் நான் மயங்குகிறேனே
பகல் எதுவோ இரவெதுவோ
வெளிச்சங்களை மறுத்ததனாலே
நிலவுகளின் சதி இதுவோ

ஆண்: அறையும் கதவும் அடைந்தே கிடந்தால்
இரவும் பகலும் இணையும் இருளாய்

பெண்: உனையே  உலகம் என நான்  நினையும் நிலையே வரமாகும்

பெண்: ஒரு வீட்டில் நீயும் நானும் 
ஒன்றாக வாழும் நேரம் 
எதிர்பார்த்தே இருந்தேன் பல காலம் 
இது நாள் வரையில் 
கனவெல்லாம் இனிதாய் நனவாகும்
இரவின் மடியில்

பெண்: உதடுகளின் அசைவுகள் என்றால்
பேச்செனவே அறிந்திருந்தேன் ஒலிகளில்லா இனி ஒரு வேலை நீ கொடுத்தாய் 
தெரிந்து கொண்டேன்

ஆண்: இதுவே குறைவு இனிமேல் இருக்கு 
இனிதாய் தொடரும் முதல்நாள்  கிறுக்கு

பெண்: உடலின் இசைகள் உயிரின் கசைகள் அறிந்தேன் பலநாட்கள்

ஆண்: ஒரு வீட்டில் நீயும் நானும் 
ஒன்றாக தூங்கும் நேரம் 
எதிர்பார்த்தே எழுந்தேன் தினந்தோறும்
முதல் நாள் வரையில்
இனியெல்லாம் முழுதாய் அரங்கேறும்
விரும்பும் வகையில்..



......................



Songs lyrics from Theeran adhigaram ondru movie: