CHINNA CHINNA KANNASAIVIL-LAALI LAALI
சின்ன சின்ன கண்ணசைவில்- லாலி லாலி
Movie: Theeran adhigaram ondru
Singers: Sathyaprakash, Pragathi guruprasad
Music director: Ghibran
ஆண்: சின்ன சின்ன கண்ணசைவில் உன் அடிமை ஆகவா..
செல்ல செல்ல முத்தங்களில் உன் உயிரை வாங்கவா..
லாலி லாலி...நான் உன் தூளி தூளி..
பெண்: மெல்ல மெல்ல என்னுயிரில் உன்னுயிரும் அசையுதே..
துள்ள துள்ள என்னிதயம் நம்முயிரில் நிறையுதே..
லாலி லாலி...நீ என் தூளி தூளி..
ஆண்: உன்னை அள்ளி ஏந்தியே ஒரு யுகம் போகவா..
தலை முதல் கால் வரை பணிவிடை பார்க்கவா..
லாலி லாலி..நான் உன் தூளி தூளி..
பெண்: லாலி லாலி...நீ என் தூளி தூளி..
பெண்: காலை அணைப்பின் வாசமும்..
காதில் கிறங்கும் சுவாசமும்..
சாகும்போதும் தீர்ந்திடாது..வா உயிரே..
ஆண்: காதில் உதைக்கும் பாதமும்..
மார்பில் கிடக்கும் நேரமும்..
வாழும் வரைக்கும் தேய்ந்திடாது வா உயிரே..
ஆண்: ஆணில் தாய்மை கருவாகும்..
ஈரம் பூத்து மழையாகும்..
ஆ&பெ: கண்ணீர் சுகமாய் இமை மீறும்..
காலம் உந்தன் வரமாகும்..
ஆண்: சின்ன சின்ன கண்ணசைவில் உன் அடிமை ஆகவா..
செல்ல செல்ல முத்தங்களில் உன் உயிரை வாங்கவா..
லாலி லாலி...நான் உன் தூளி தூளி..
பெண்: மெல்ல மெல்ல என்னுயிரில் உன்னுயிரும் அசையுதே..
துள்ள துள்ள என்னிதயம் நம்முயிரில் நிறையுதே..
லாலி லாலி...நீ என் தூளி தூளி..
பெண்: என்னை அள்ளி ஏந்தியே ஒரு யுகம் போகவா..
தலை முதல் கால் வரை
ஆ&பெ: பணிவிடை பார்க்கவா..
பெண்: லாலி லாலி...நீ என் தூளி தூளி..
லாலி லாலி..நீ என் தூளி தூளி..
............
Songs lyrics from Theeran adhigaram ondru movie:
