KANNUKULLE UNNAI VAITHEN

 கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன்



Movie: Pennin manathai thottu

Singers: Unni krishnan

Music director: S.A.Rajkumar 


கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா..
நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா..
நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா..
அடி நீதான் என் சந்தோஷம்..
பூவெல்லாம் உன் வாசம்..
நீ பேசும் பேச்செல்லாம் நான் கேட்கும் சங்கீதம்..
உன் புன்னகை நான் சேமிக்கின்ற செல்வமடி..
நீ இல்லையென்றால் நானும் இங்கே ஏழையடி..

மனிதர்களை வாசிக்கிறேன்..
மனிதனை பூவாய் யாசிக்கிறேன்..
உணர்வுகளை நேசிக்கிறேன்..
உனைத்தானே உயிராய் சுவாசிக்கிறேன்..
எனக்குள்ளே உன் மூச்சு..
எதற்காக என் மூச்சு..
அடி மௌனம் வேண்டாம் கண்மணியே ஒரு வார்த்தை பேசி விடு..
நான் எனக்குள் இல்லை தொலைத்து விட்டேன் நீ என்னை மீட்டுக் கொடு..

கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா..
நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா..
நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா..

சுகம் என்பது தொலைவானது..
உனை கண்ட பின்னே எனை சேர்ந்தது..
வாழ்வெனக்கு வசப்பட்டது..
வசந்தம் என் கண்ணில் தென்பட்டது..
அலை பாய்ந்த நெஞ்சுக்குள் அமைதியை தந்தாயே..
நான் தேடிக்கண்ட திரவியமே எனை உனக்காய் வார்த்தேனே..
என் ஜீவன் முழுதும் வாரித் தந்து உன் உயிரை காப்பேனே..

கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா..
நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா..
நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா..
அடி நீதான் என் சந்தோஷம்..
பூவெல்லாம் உன் வாசம்..
நீ பேசும் பேச்செல்லாம் நான் கேட்கும் சங்கீதம்..
உன் புன்னகை நான் சேமிக்கின்ற செல்வமடி..
நீ இல்லையென்றால் நானும் இங்கே ஏழையடி..



.................




Songs lyrics from Pennin manathai thottu movie: