KANNAN VARUM VELAI

 கண்ணன் வரும் வேளை



Movie: Deepavali 

Singers: Anuradha sriram,  Madhusree

Music director: Yuvan Shankar raja 


கண்ணன் வரும் வேளை அந்தி மாலை
நான் காத்திருந்தேன்..
சின்ன சின்ன தயக்கம் சில மயக்கம் 
அதை ஏற்க நின்றேன்..
கட்டுகடங்கா எண்ண அலைகள்..
ரெக்கை விரிக்கும் ரெண்டு விழிகள்..
கூடு பாயும் குறும்புகாரன் அவனே..

கண்ணன் வரும் வேளை அந்தி மாலை
நான் காத்திருந்தேன்..
சின்ன சின்ன தயக்கம் சில மயக்கம் 
அதை ஏற்க நின்றேன்..

வான்கோழி கொள்ளும் ஆசை ஆடி தோற்பது..
தை மாசம் கொள்ளும் ஆசை கோடை பார்ப்பது..
தேர் கால்கள் கொள்ளும் ஆசை வீதி சேர்வது..
ஓர் ஈசல் கொள்ளும் ஆசை தீயில் வாழ்வது..
கூறவா இங்கு எனது ஆசையை..
தோழனே வந்து உளறு மீதியை..
கோடி கோடி ஆசை தீரும் மாலை..

கண்ணன் வரும் வேளை அந்தி மாலை
நான் காத்திருந்தேன்..
சின்ன சின்ன தயக்கம் சில மயக்கம் 
அதை ஏற்க நின்றேன்..

பூவாசம் தென்றலோடு சேர வேணுமே..
ஆண்வாசம் தொட்டிடாத தேகம் ஊனமே .
தாய் பாசம் பத்து மாதம் பாரம் தாங்குமே..
வாழ்நாளின் மிச்ச பாரம் காதல் ஏந்துமே..
நீண்ட நாள் கண்ட கனவு தீரவே..
தீண்டுவேன் உன்னை இளமை ஊறவே..
நீயில்லாமல் நிழலும் எனக்கு தொலைவே..

கண்ணன் வரும் வேளை அந்தி மாலை
நான் காத்திருந்தேன்..
சின்ன சின்ன தயக்கம் செல்ல மயக்கம் 
அதை ஏற்க நின்றேன்..
கட்டுகடங்கா எண்ண அலைகள்..
ரெக்கை விரிக்கும் ரெண்டு விழிகள்..
கூடு பாயும் குறும்புகாரன் அவனே..

கண்ணன் வரும் வேளை அந்தி மாலை
நான் காத்திருந்தேன்..
சின்ன சின்ன தயக்கம் செல்ல மயக்கம் 
அதை ஏற்க நின்றேன்..



.................



Songs lyrics from Deepavali movie: