AIYO PATHIKKICHU
ஐயோ பத்திக்கிச்சு
Movie: Rhythm
Singers: Udit narayan, Vasundara das
Music director: A.R.Rahman
பெண்: ஐயோ பத்திக்கிச்சு பத்திக்கிச்சு பத்திக்கிச்சு..ஓ ஓ கண்ணே..
ஆண்: ஐயோ பத்திக்கிச்சு பத்திக்கிச்சு பத்திக்கிச்சு..ஓ ஓ பெண்ணே..
பெண்: நெஞ்சோ சிக்கிக்கிச்சு சிக்கிக்கிச்சு சிக்கிக்கிச்சு..ஓ ஓ கண்ணே..
ஆண்: ஹே முள்ளை முள்ளால் எடுப்பது போல்
நெருப்பை நெருப்பால் அணைப்போம் வா..
ஹே முள்ளை முள்ளால் எடுப்பது போல்
நெருப்பை நெருப்பால் அணைப்போம்..
உன் கண்ணோடு வாழ்கின்ற காதல் தீ வாழ்க..
பெண்: ஹே முள்ளை முள்ளால் எடுப்பது போல்
நெருப்பை நெருப்பால் அணைப்போம் வா..
உன் கண்ணோடு வாழ்கின்ற காதல் தீ வாழ்க..
ஆண்: ஐயோ பத்திக்கிச்சு..
பெண்:ஆணும் பெண்ணும் சிக்கிமுக்கி கல் ..
ஒன்றுடன் ஒன்று உரச பொறி வருமே வா வா..
ஆண்: ஐம்பொறியெல்லாம் தீப்பொறி தான்
ஆசையில் எரியும் சரிதான்
அணைவதற்குள் வா வா வா வா வா வா வா வா
பெண்: காதல் நெருப்பு உள்ள வரை காலம் உறைவதில்லை
கதிரவனே வா வா
காதலிப்போம் வா வா
ஆண்: தீதான் முதல் விஞ்ஞானம்..
காதல் தான் முதல் மெய்ஞானம்..
தீ பத்திக்கிச்சு பத்திக்கிச்சு பத்திக்கிச்சு பத்திக்கிச்சு பத்திக்கிச்சு பத்திக்கிச்சு..
பெண்: ஐயோ பத்திக்கிச்சு பத்திக்கிச்சு பத்திக்கிச்சு..ஓ ஓ கண்ணே..
ஆண்: நெஞ்சோ சிக்கிக்கிச்சு சிக்கிக்கிச்சு சிக்கிக்கிச்சு..ஓ ஓ கண்ணே.
பெண்: ஹே முள்ளை முள்ளால் எடுப்பது போல்
நெருப்பை நெருப்பால் அணைப்போம்..
உன் கண்ணோடு வாழ்கின்ற காதல் தீ வாழ்க..
ஆண்: தீச்சுடர் எரிய பொருள் வேண்டும்
காதல் எரிவது எதிலே
பதில் சொல்ல வா வா வா வா வா வா வா
பெண்: ஒவ்வொரு உயிரையும் திரியாக்கி
காதல் தன் சுடர் கொளுத்தும்
ஒளி விடுவோம் வா வா வா வா
ஆண்: காதல் நெருப்பை நீ வளர்த்து
கவலை குப்பைகளை கொளுத்து
சுடர் வளர்ப்போம் வா வா
சுகம் வளர்ப்போம் வா வா வா
பெண்: தீபம் போலே இருந்தவள் நான்
தீப்பந்தமாய் என்னை மாற்றி விட்டாய்
பத்திக்கிச்சு பத்திக்கிச்சு பத்திக்கிச்சு பத்திக்கிச்சு ஐயோ ஐயோ ஐயோ ...
பெண்: ஐயோ பத்திக்கிச்சு..
ஆண்: நெஞ்சோ சிக்கிக்கிச்சு..
பெண்: ஐயோ ஐயோ ஐயோ..
பத்திக்கிச்சு..பத்திக்கிச்சு பத்திக்கிச்சு பத்திக்கிச்சு பத்திக்கிச்சு
ஓ..ஐயோ பத்திக்கிச்சு....
..........................
Songs lyrics from Rhythm movie:
