KADAL NAAN DHAN

 கடல் நான் தான் 



Movie: Endrendrum punnagai 

Singers: Sudha ragunathan, Suzanne D'Mello, M.K.Balaji

Music director: Harris jayaraj 


பெண்: கடல் நான் தான் அலை ஓய்வதே இல்லை..
சுடர் நான் தான் தலை சாய்வதே இல்லை..
ஒரு துணை இல்லாதது 
பெண்மை துயில் கொள்ளாதது 
உண்மை தூக்கம் கெட்டு தான் கண்ணும் தேடும் உன்னை..

கடல் நான் தான் அலை ஓய்வதே இல்லை..
சுடர் நான் தான் தலை சாய்வதே இல்லை..
ஒரு துணை இல்லாதது 
பெண்மை துயில் கொள்ளாதது 
உண்மை தூக்கம் கெட்டு தான் கண்ணும் தேடும் உன்னை..

ஆண்: வா எந்தன் ..
பெண்: இதழாலே காதல் கவிதை தான்

ஆண்: நான் உன் மேல்
பெண்: எழுதாயோ காலை வரையில் தான்..

ஆண்: உன் அங்கம்..
பெண்: முழுதும் உன் பாடல் வரிகள் தான்...

பெண்: உனை பார்த்த முதல் தடவை
என் உள்ளக் கதவை நான் திறந்து விட்டேன்..
உடல் ஆவி உனக்கெனவே 
ஓர் உயில் எழுதி நான் இறந்து விட்டேன்..
என் தோழா.. உன் இதழை 
என் இதழ் மேல் வைத்தால் நான் உயிர்ப்பேன்..
என் அன்பே நான் தழுவ 
நீ நழுவ விட்டால் நான் மறுபடி மரித்திடுவேன்..

தலைவா உன் தலைக்கினிமேல் 
ஓர் தலையணையாய் என் தொடை இருக்கும்..
மெதுவாய் உன் விழி துயில 
என் வளை குலுங்கி மெல் இசை படிக்கும்..
அங்கங்கே பெண் பறவை தன் சிறகை உன் மீது விரிக்கும்..
அம்மாடி உன் குளிரும் என் குளிரும் நில்லாமல் நொடியினில் விலகிடுமே..

கடல் நான் தான் அலை ஓய்வதே இல்லை..
சுடர் நான் தான் தலை சாய்வதே இல்லை..
ஒரு துணை இல்லாதது 
பெண்மை துயில் கொள்ளாதது 
உண்மை தூக்கம் கெட்டு தான் கண்ணும் தேடும் உன்னை..

ஆண்: வா எந்தன்.. 
பெண்: இதழாலே காதல் கவிதை தான்

ஆண்: நான் உன் மேல்..
பெண்: எழுதாயோ காலை வரையில் தான்..

ஆண்: உன் அங்கம்..
பெண்: முழுதும் உன் பாடல் வரிகள் தான்..


...................



Songs lyrics from Endrendrum punnagai movie:-