ENAI SAITHALE
எனை சாய்த்தாளே
Movie: Endrendrum punnagai
Singers: Hariharan, Shreyaghoshal
Music director: Harris jayaraj
ஆண்: எனை சாய்த்தாளே..உயிர் தேய்த்தாளே..
இனி வாழ்வேனோ..இனிதாக..
தடுமாறாமல்..தரை மோதாமல்..
இனி மீள்வேனோ..முழுதாக..
இதழோரத்தில் நகை பூத்தாளே..
என் பாவங்கள் தீர்த்தேன்..
ஓ..மழை ஈரத்தில் நனையாமல் நான்..
வெளியேறத்தான் பார்த்தேன்..
நடக்கிற வரை..நகர்கிற தரை..
அதன் மேல் தவிக்கிறேன்..
விழிகளில் பிழை..விழுகிற திரை..
அதனால் திகைக்கிறேன்..
ஆண்: நேற்று போலே வானம்..அட இன்றும் கூட நீலம்..
என் நாட்கள் தான் நீளும்..
பெண்: தள்ளி போக எண்ணும்.. கால் பக்கம் வந்து பின்னும்..
கேட்காதே யார் சொல்லும்..
ஆண்: பறவை நான்..சிறகு நீ..
நான் காற்றை வெல்ல ஆசை கொண்டேன்..
பெண்: பயணம் நான்..வழிகள் நீ..
நான் எல்லை தாண்டி செல்ல கண்டேன்..
ஆண்: எனை சாய்த்தாளே..உயிர் தேய்த்தாளே..
இனி வாழ்வேனோ..இனிதாக..
தடுமாறாமல்..தரை மோதாமல்..
இனி மீள்வேனோ..முழுதாக..
ஆண்: மாலை வந்தால் போதும்..ஒரு நூற்றி பத்தில் தேகம்..
செங்காந்தள் போல் காயும்..
பெண்: காற்று வந்து மோதும்..உன் கைகள் என்று தோன்றும்..
பின் ஏமாற்றம் தீண்டும்..
ஆண்: தவிப்பதை மறைக்கிறேன்..
என் பொய்யை பூட்டி வைத்து கொண்டேன்..
பெண்: கனவிலே விழிக்கிறேன்..
என் கையில் சாவி ஒன்றை கண்டேன்..
ஆண்: எனை சாய்த்தாளே... ர.ர.ரா.ரா.ரா.....
இனி வாழ்வேனோ..இனிதாக..
பெண்: தடுமாறாமல்..தரை மோதாமல்..
இனி மீள்வேனோ..முழுதாக..
ஆண்: இதழோரத்தில் நகை பூத்தாளே..
என் பாவங்கள் தீர்த்தேன்..
பெண்: ஓ..மழை ஈரத்தில் நனையாமல் நீ..
வெளியேறத்தான் பார்த்தாய்..
ஆண்: நடக்கிற வரை..நகர்கிற தரை..
அதன் மேல் தவிக்கிறேன்..
பெண்: விழிகளில் பிழை..விழுகிற திரை..
அதனால் திகைக்கிறேன்..
...........
Songs lyrics from Endrendrum punnagai movie:-
