RANGOLA

ரங்கோலா


Movie: Ghajini 

Singers: Shankar mahadevan, Sujatha,  Ranjith

Music director:Harris jayaraj 


ஆண்: ஓ..ரங்கோலா ஓலா ஓலா பெண்ணே நீதானோ..
உன்னை முத்தமிட்டு ஒட்டி கொண்ட வண்ணம் நான்தானோ..

பெண்: ஓ..ரங்கோலா ஓலா ஓலா ராசா நீதானோ..
உன்னை முத்தமிட்டு ஒட்டி கொண்ட வண்ணம் நான்தானோ..

ஆண்:  கோமளவள்ளி வள்ளி..
கண்களால் கொல்லும் வில்லி..
திரும்பி நான் நிக்க சொல்லி..
வச்சி விடவா மல்லி..

பெண்:  காத்தவராயா ராயா..
மல்லிப்பூ வேணாம்  போயா..
மாலைய வாங்கி தாயா..
என்ன நீ தோளு மேல தூக்கி போயா..

ஆண்:  ஓய்..ரங்கோலா ஓலா ஓலா பெண்ணே நீதானோ..
உன்னை முத்தமிட்டு ஒட்டி கொண்ட வண்ணம் நான்தானோ..

பெண்: ஓ..ரங்கோலா ஓலா ஓலா ராசா நீதானோ..
உன்னை முத்தமிட்டு ஒட்டி கொண்ட வண்ணம் நான்தானோ..

ஆண்:  ஓ..நிலா நிலா பறந்து வாயேன்..
உலகினை மறந்து வாயேன்..
அழகினை நெருங்கி வாயேன்..
அலை அலையாய்..

பெண்:  தொடாமலே அணைக்கிறானே..
தடால் என இழுக்குறானே..
விடாமலே துரத்துறானே..
அடாவடியா..

ஆண்:  நான் ஒரு தல ராவணன் புள்ள..
உனை மணந்திட உடைக்கவா வில்ல..
குருங்கடல் போல கொதிக்குது ஆச..
குளிக்கலாம் வா மெல்ல..

பெண்:  என் இடுப்புல குலுங்குது சாவி..
அத வெடுக்குனு எடுக்குற பாவி..
கைகள தொட்டு கசமுசா செஞ்சா..
கத்திடுவேன் கூவி..

பெண்:  ஓ..ரங்கோலா ஓலா ஓலா ராசா நீதானோ..
உன்னை முத்தமிட்டு ஒட்டி கொண்ட வண்ணம் நான்தானோ..

பெண்: இளமைய வருடுறானே..
இதயத்தை திருடுறானே..
உயிரினை நெருடுறானே..
சுகம் சுகமாய்..

ஆண்: ஓ..தளிர் என இருக்குறாளே..
பளீர் என சிரிக்குறாளே..
சுளீர் என முறைக்குறாளே..
அழகழகா..

பெண்: உன் மரக்கட வண்டி மீது..
நான் மெனக்கெட்டு ஏறும்போது..
கடகட என்று தடதடவென்று..
இழுத்தவன் நீதானே..

ஆண்:  நான் சடுகுடு ஆடும்போது..
நீ தொடுகிற எல்லை கோடு..
விடுவிடு என்று படபடவென்று பறந்தவள் நீதானே..

ஆண்: ஓய்..ரங்கோலா..
ரங்கோலா ஓலா ஓலா பெண்ணே நீதானோ..
உன்னை முத்தமிட்டு ஒட்டி கொண்ட வண்ணம் நான்தானோ..

பெண்:  ஓ..ரங்கோலா ஓலா ஓலா ராசா நீதானோ..
உன்னை முத்தமிட்டு ஒட்டி கொண்ட வண்ணம் நான்தானோ..

ஆண்: கோமளவள்ளி வள்ளி..
கண்களால் கொல்லும் வில்லி..
திரும்பி நான் நிக்க சொல்லி..
வெச்சி விடவா மல்லி..

பெண்:  காத்தவராயா ராயா..
மல்லிப்பூ வேணாம்  போயா..
மாலைய வாங்கி தாயா..
என்ன நீ தோளு மேல தூக்கி போயா..



...............



Songs lyrics from Ghajini movie:-