ORU MURAI

 ஒரு முறை


Movie: Muppozhudhum un karpanaigal

Singers: G.V.Prakash kumar,Andrea jeremiah, Blaaze

Music director: G.V.Prakash kumar


அந்தியின் வெய்யிலை பந்தாடுதே பெய் மழை..
இந்நிலை சொல்லுதே என் காதலின் வானிலை..
ஒரு முறை ஒரு முறை என் விழிகளை பாராயோ..
கனவுகள் கசிந்திட அது கதைப்பதை கேளாயோ..
பாதி கண்களை மூடுகிறேன்..
மீதி கண்களில் தேடுகிறேன்..
உள்ளும் புறமும் உன் முகமே உந்திட கண்டேனே..
என் நெஞ்சம் எங்கும் பொங்குகின்ற காதல்..
அது சொல்லிவிட வேண்டும் என்று ஆவல்..
அட என்ன வந்து சொல்வதென்று கேட்டால்..
என்ன செய்வேன் நான்..
ஒரு மொட்டு அவிழ்ந்த ஒற்றை ரோஜா பார்த்தேன்..
என் கட்டவிழ்ந்த காதல் சொல்ல இயலும்.. 
அதை நம்பவில்லை நம்பவில்லை 
நானும்.. 
வாங்கவில்லை நான்..

பல வண்ண வண்ண கற்கள் வைத்த கைப்பை..
நம் பெயர்களை அச்சடித்த கோப்பை..
நீ தூங்கவென்று கத கத போர்வை..
தேடுகின்றேன் நான்..
நீ தொட்டுக்கென சிப்பி சங்கு தரவா..
மான் குட்டி படம் முத்துசரம் தரவா..
பெண் குட்டி போல துவல் வாங்கி தரவா
என்னதான் வாங்க..

சிரிப்பை இறைக்கும் உனக்கு.. 
வீட்டில் செயற்கை அருவி தரலாம்..
இதயம் முழுதும் ஈரம்..
அதனால் செடிகள் வளர்க்க தரலாம்..
அழகு செய்யும் சாதனம்.. வாங்க தோன்றும் காரணம் 
உன்னை சேர்ந்த பின்புதான் அழியும் அவற்றின் ஆணவம்..
ஓர் பக்கம் வந்தால் அதிகமாய் துடிக்கும்.
சற்று தள்ளி சென்றால் செத்தது போல் நடிக்கும்..
அட இதயத்தை அவள் கையில் தந்தால் என்ன செய்வாளோ..
உன்னை ஏந்தி செல்ல எப்பொழுதும் இருப்பேன்..
நீ சொல்லும் வழி காலடிகள் கொடுப்பேன்..
ஓர் தேவை என்றால் கால்மிதியாய் கிடப்பேன்..
தாண்டினால் என்ன..

ஓ..ஒரு முறை ஒரு முறை என் விழிகளை பாராயோ..
கனவுகள் கசிந்திட அது கதைப்பதை கேளாயோ..

உனது பெரிய படத்தால் அறையின் சுவரை மறைத்திட விடவா..
நிலவின் ஒளியில் மின்னும் முகத்தை  விரலை நீட்டி தொடவா..ஏ..
தாஜ்மஹால் வாங்கலாம்..
ஷாஜகானாய் மாறலாம்..
ஏற்கவில்லை நான் அதை உனக்கு பின்பு வாழ்வதை..
மலர் கொத்துக்களோ ரொம்ப ரொம்ப அலுப்பு..
விரல் மோதிரங்கள் இப்போதெல்லாம் சலிப்பு..
அட தங்கத்துக்கு தங்கநகை எதுக்கு..
வாங்கவில்லை நான்..

ஏ..ஒரு முறை ஒரு முறை என் விழிகளை பாராயோ..
கனவுகள் கசிந்திட அது கதைப்பதை கேளாயோ..





...............





Songs lyrics from Muppozhudhum un karpanaigal movie:-