OH SUNANDHA

 ஓ..சுனந்தா



Movie:  Muppozhudhum un karpanaigal 

Singer:Raman mahadevan, Caroline

Music director: G.V.Prakash kumar 


ஆஆ..ஆ..ஆஆ..ஆ..ஆஆ..
ஆஆ..ஆ..ஆஆ..ஆ..ஆஆ..

ஓ சுனந்தா..சுனந்தா..
ஒரே சுகமாய் நடந்தாள்..
தேன் சுவையாய் நிறைந்தாள்..
முதல் முறை...
கடிவாளம் இல்லா காற்றை போலவே..
வடிவங்கள் இல்லா வாசம் போலவே..
மனம் இன்று ஏனோ ஏனோ பொங்குதே..
நுரை போலே நீ..அலை போலே நான்..
ஆஆ..ஆ..ஆஆ..ஆ..ஆஆ..ஆ
ஆஆ..ஆ..ஆஆ..ஆ..ஆஆ..ஆ

ஓ..சுனந்தா..சுனந்தா..ஹூஹூ..
ஒரே சுகமாய் நடந்தாள்..யே யே யே..

மழை விழுகிற பொழுதினிலே.. 
மயில் நடனங்கள் புரிகிறதே..
பனி துளிகளின் சுமைகளிலே..
மலர் ஒருபுறம் சரிகிறதே..
நேற்று நான் வேறொரு ஆடவன்..
இன்று நான் வெண்பனி ஆனவன்..
தேய்பிறை நாட்களும் போனதே..
வான்நிலா பௌர்ணமி ஆனதே..
ஆஆ..ஆ..ஆஆ..ஆ..ஆஆ..
ஆஆ..ஆ..ஆஆ..ஆ..ஆஆ..

ஓ சுனந்தா..சுனந்தா..
ஒரே சுகமாய் நடந்தாள்..

துயில் கலைந்ததும் விழிகளிலே..
புது தினங்களின் கனவுகளே..
நவ மணிகளின் நடுவினிலே..
தனி மரகத பவளங்களே..
மின்மினி பூச்சிகள் கூடியே..
பேசுதே நித்தமும் வம்புகள்..
யாரிவன் அந்நியன் ஆயினும்..
பெண்மனம் காட்டிடும் அன்புகள்..
ஆஆ..ஆ..ஆஆ..ஆ..ஆஆ..
ஆஆ..ஆ..ஆஆ..ஆ..ஆஆ..

ஓ சுனந்தா..சுனந்தா..
ஒரே சுகமாய் நடந்தாள்..
தேன் சுவையாய் நிறைந்தாள்..
முதல் முறை...
கடிவாளம் இல்லா காற்றை போலவே..
வடிவங்கள் இல்லா வாசம் போலவே..
மனம் இன்று ஏனோ ஏனோ பொங்குதே..
நுரை போலே நீ..அலை போலே நான்..
ஆஆ..ஆ..ஆஆ..ஆ.ஆஆ..ஆ
ஆஆ..ஆ..ஆஆ..ஆ..ஆஆ..ஆ





...............






Songs lyrics from Muppozhudhum un karpanaigal movie:-