KANGAL NEEYE
கண்கள் நீயே
Movie:Muppozhudhum un karpanaigal
Singer: Sithara
Music director: G.V.Prakash kumar
கண்கள் நீயே... காற்றும் நீயே...
தூணும் நீ... துரும்பில் நீ....
வண்ணம் நீயே...வானம் நீயே...
ஊனும் நீ....உயிரும் நீ....
பலநாள் கனவே...ஒருநாள் நனவே....
ஏக்கங்கள்.....தீர்த்தாயே....
எனையே பிழிந்து.... உனை நான் எடுத்தேன்......
நான்தான் நீ....வேறில்லை...
முகம் வெள்ளைத்தாள்..அதில் முத்தத்தால்..ஒரு வெண்பாவை நான் செய்தேன் கண்ணே..
இதழ் எச்சில் நீர் எனும் தீர்த்தத்தால்
அதில் திருத்தங்கள் நீ செய்தாய் கண்ணே....
கண்கள் நீயே... காற்றும் நீயே...
தூணும் நீ..... துரும்பில் நீ......
வண்ணம் நீயே...வானம் நீயே...
ஊனும் நீ.....உயிரும் நீ.....
இந்த நிமிடம் நீயும் வளர்ந்து என்னை தாங்க ஏங்கினேன்...
அடுத்த கணமே குழந்தையாக என்றும் இருக்க வேண்டினேன்....
தோளில் ஆடும்......சேலை....
தொட்டில்தான்....பாதி வேளை...
பலநூறு மொழிகளில் பேசும் முதல் மேதை நீ.....
இசையாக பலபல ஓசை செய்திடும்....
இராவணன்....ஈடில்லா என்மகன்...
எனை தள்ளும் உன்... குழி கன்னத்தில்....
என் சொர்க்கத்தை நான் கண்டேன் கண்ணே...
எனை கிள்ளும் உன் விரல் மெத்தைக்குள் என் முத்தத்தை நான் தந்தேன் கண்ணே...
என்னை விட்டு...இரண்டு எட்டு....
தள்ளி போனால் தவிக்கிறேன்...
மீண்டும் உன்னை...அள்ளி எடுத்து...
கருவில் வைக்க நினைக்கிறேன்.....
போகும் பாதை நீளம்.....
கூரையாய் நீல வானம்.....
சுவர்மீது கிறுக்கிடும் போது ரவிவர்மன் நீ....
பசியென்றால் தாயிடம் தேடும் மானிட மர்மம் நீ....
நான் கொள்ளும் கர்வம் நீ....
கடல் ஐந்தாறு...மலை ஐநூறு...
இவை தாண்டிதானே..பெற்றேன் உன்னை...
உடல் செவ்வாது....பிணி ஒவ்வாது.....
பல நூறாண்டு நீ...ஆள்வாய் மண்ணை..
கண்கள் நீயே... காற்றும் நீயே.
தூணும் நீ..... துரும்பில் நீ...
வண்ணம் நீயே...வானம் நீயே..
ஊனும் நீ...உயிரும் நீ...
.......................
Songs lyrics from Muppozhudhum un karpanaigal movie:-
