KADHALUKKU KANGAL ILLAI

 காதலுக்கு கண்கள் இல்லை 



Movie: Santhosh subramaniam 

Singers: Devi sri prasad 

Music director: Devi sri prasad 


ஏ..காதலுக்கு கண்கள் இல்லை யாரோ சொன்னானே..
மூளை கூட இல்லை என்று சொன்னேன் நானே..
ஆனா இப்போ..ம்..
காதலாலே பூமி இங்கு சுத்துது என்றானே..
காதில் பூவை சுத்தாதே ன்னு சொன்னேன் நானே..
ஆனா இப்போ..ம்..
லூசு ரெண்டு சேர்ந்தாலே.. சும்மா பேசிக்கொண்டாலே..
காதல் வரும் தன்னாலே என்றேன் நானே..
பீச்சில் வாங்கும் சுண்டலே.. தீர்ந்து போச்சு என்றாலே..
காதல் கூட தீரும் என்பேன் நானே..

ஓஓஓ.. என்ன ஆனதோ ஹார்மோன்கள் கட்சி மாறுதோ..
ஓஓஓ..இந்த நாள் முதல் என் பாடல் அவள் ராகத்தில்..

ஏ..காதலுக்கு கண்கள் இல்லை யாரோ சொன்னானே..
மூளை கூட இல்லை என்று சொன்னேன் நானே..
ஆனா இப்போ..ம்ம்..
காதலாலே பூமி இங்கு சுத்துது என்றானே..
காதில் பூவை சுத்தாதே ன்னு சொன்னேன் நானே..
ஆனா இப்போ..ம்ம்..

ஓஓ.. அப்பன் காசெல்லாம் செல்போன் பில்லுக்கே காலி ஆச்சு என்று சொன்னால் கேலி செய்தேனே..
ஆனா இப்போ..ம்ம்..
தன்னந் தனிமையிலே தானே பேசயிலே
நைட் அடிச்ச மப்பு இன்னும் இறங்கல என்றேனே..
ஆனா இப்போ...
காதல் என்னை என்ன செய்யும் ஓவர் திமிரில் அலைந்தேன் நானே..
நானும் இன்று கியூவில் நின்று இதயத்தைப் பறி கொடுத்தேனே..

ஓஓஓ.. என்ன ஆனதோ ஹார்மோன்கள் கட்சி மாறுதோ..
ஓஓஓ..இந்த நாள் முதல் என் வானம்  அவள் கண்களில்..

ஏ..காதலுக்கு கண்கள் இல்லை யாரோ சொன்னானே..
அட மூளை கூட இல்லை என்று சொன்னேன் நானே..
ஆனா இப்போ..ம்ம்..

ஓஓ.. கண்ணில் விழுவாளாம்..
நெஞ்சில் நுழைவாளாம்..
ஏன்டா இந்த பீலா என்று கூலாய் கேட்டேனே..
ஆனா இப்போ..ம்ம்..
ஆதாம் முட்டாளா ஏவாள் முட்டாளா
பட்டிமன்றம் வைத்துப் பார்க்க ஆசைப் பட்டேனே..
ஆனா இப்போ ம்ம்..
கோடி பொய்கள் கட்டிய மூட்டை காதல் என்று சொன்னேன் நானே ..
பொய்கள் எல்லாம் பொய்யாய்ப் போக மெய்யினை  உணர்ந்து கொண்டேனே..

ஓஓஓ.. என்ன ஆனதோ ஹார்மோன்கள் கட்சி மாறுதோ ..
ஓஓஓ..இந்த நாள் முதல் என் வாழ்க்கை அவள் வார்த்தையில்..

காதலுக்கு கண்கள் இல்லை யாரோ சொன்னானே..
மூளை கூட இல்லை என்று சொன்னேன் நானே..
ஆனா இப்போ..ம்ம்..
காதலாலே பூமி இங்கு சுத்துது என்றானே..
காதில் பூவை சுத்தாதே ன்னு சொன்னேன் நானே..
ஆனா இப்போ..ம்ம்..



..................



Songs lyrics from Santhosh subramaniam movie:-