AIYAIYO NENJU

 அய்யய்யோ நெஞ்சு 



Movie: Aadukalam

Singers: S.P.Balasubramaniam,  S.P.B.Charan, Prashanthini

Music director:G.V.Prakash Kumar 


ஆண்: அய்யய்யோ நெஞ்சு அலையுதடி..
ஆகாயம் இப்போ வளையுதடி..
என் வீட்டில் மின்னல் ஒளியுதடி..
என்மேல நிலா பொழியுதடி..
உன்ன பாத்த அந்த நிமிஷம்..
உறைஞ்சு போச்சு நகரவே இல்ல..
தின்ன சோறும் செரிக்கவே இல்ல..
கொலம்புறேன் நானே..

உன் வாசம் அடிக்கிற காத்து என் கூட நடக்கிறதே..
என் சேவ கூவுற சத்தம்
உன் பேரா கேக்குறதே..

ஓ..அய்யய்யோ நெஞ்சு அலையுதடி..
ஆகாயம் இப்போ வளையுதடி..
என் வீட்டில் மின்னல் ஒளியுதடி..
என்மேல நிலா பொழியுதடி..

ஆண்: ஒன்ன தொடும் அனல் காத்து..
கடக்கையிலே பூங்காத்து..
கொழம்பி தவிக்குதடி என் மனசு..

பெண்: ஓ..திருவிழா கடைகள போல திணறுறேன் நான்தானே..
எதிரில் நீ வரும்போது மெரளுறேன் ஏன்தானோ..

ஆண்:  கண்சிமிட்டும் தீயே..
என்ன எரிச்சுபுட்ட நீயே..

பெண்: ஓ அய்யய்யோ 
ஆண்: நெஞ்சு அலையுதடி..
பெண்: ஆகாயம் 
ஆண்: இப்போ வளையுதடி..
பெண்: என் வீட்டில் 
ஆண்: மின்னல் ஒளியுதடி..
பெண்: என்மேல 
ஆண்: நிலா பொழியுதடி..

ஆண்:  மழைச்சாரல் விழும் வேள..
மண்வாசம் மணம் வீச..
உன் மூச்சு தொடவே நான் மிதந்தேன்..

பெண்: ஓ..கோடையில அடிக்கிற மழையா..
நீ என்ன நனைச்சாயே..
ஈரத்தில அணைக்கிற சுகத்த..
பார்வையில கொடுத்தாயே..

ஆண்: பாதகத்தி என்ன ஒரு பார்வையால கொன்ன..
ஊரோடு வாழுற போதும்..
யாரோடும் சேரல நான்..

ஆண்: ஓ..அய்யய்யோ நெஞ்சு அலையுதடி..
ஆகாயம் இப்போ வளையுதடி..
என் வீட்டில் மின்னல் ஒளியுதடி..
என்மேல நிலா பொழியுதடி..
உன்ன பாத்த அந்த நிமிஷம்..
உறைஞ்சு போச்சு நகரவே இல்ல..
தின்ன சோறும் செரிக்கவே இல்ல..
கொலம்புறேன் நானே..
உன் வாசம் அடிக்கிற காத்து என் கூட நடக்கிறதே..
என் சேவ கூவுற சத்தம்
உன் பேரா கேக்குறதே..

ஓ..அய்யய்யோ நெஞ்சு அலையுதடி..
ஆகாயம் இப்போ வளையுதடி..
என் வீட்டில் மின்னல் ஒளியுதடி..
என்மேல நிலா பொழியுதடி..


................



Songs lyrics from Aadukalam movie:-