CHILLENA ORU MAZHAITHULI
சில்லென ஒரு மழைத்துளி
Movie: Raja rani
Singers: Clinton cerejo, Alphons Joseph, Alka ajith
Music director: G.V.Prakash kumar
சில்லென ஒரு மழைத்துளி.. என்னை நனைக்குதே பெண்ணே..
சிறகுகள் யார் கொடுத்தது.. நெஞ்சம் பறக்குதே முன்னே..
உன் விழிகளிலே..ஹோ..
நான் வாழ்கிறேன் பெண்ணே..
உன் கனவுகளாய்..ஹோ..
நான் மாறினேன் பெண்ணே..
ஓ..ஓஓ..ஓ..ஓஓ..ஓ..ஓஓ..
அட கருப்பட்டியே என் சீனி கெழங்கே
சிரிச்சி கவுக்காத..
என் கன்னுக்குட்டியே கம்மாக்கரையில் நீ..
கப்பல் ஓட்டாதே..
கண்ணால பாக்காம கண்ணாலம் பண்ணலாமா..
கைகோத்து போலாமா....
கொஞ்சம் பார்த்துவிடு..கொஞ்சம் பேசிவிடு..
என்று என் விழிகள் ஐயையோ எனை திட்ட..
கோடை கால மழை வந்து போன பின்னும்..
சாலையோர மரம் தன்னாலே நீர் சொட்ட..
என்னை தாக்கும் புயலே..
இரவோடு காயும் வெயிலே..
ஓஓஓ..உன்னாலே..உன்னாலே..
நூலில்லா காற்றாடி ஆனேனே..
அடி பெண்ணே.. அடி கண்ணே..
நான் விழுந்தால் உன் பாதம் சேர்வேனே..
உன் விழிகளிலே..ஓஹோ..
நான் வாழ்கிறேன் பெண்ணே..
உன் கனவுகளாய்...
நான் மாறினேன் பெண்ணே..
சில்லென ஒரு மழைத்துளி.. என்னை நனைக்குதே பெண்ணே..
சிறகுகள் யார் கொடுத்தது.. நெஞ்சம் பறக்குதே முன்னே..
காதல் வந்தவுடன் காய்ச்சல் வந்ததடி..
மீண்டும் நான் பிழைக்க முத்தங்கள் தருவாயா..
கோபம் கொள்கையிலும் கிறங்க வைக்குதடி..
மீண்டும் ஒருமுறை நீ கோபத்தில் பார்ப்பாயா..
ஆளை கொல்லும் அழகே..
நிழல் கூட அழகின் நகலே..
ஒருநாளும்.. குறையாத..
புது போதை கண்ணோரம் தந்தாயே..
அணைத்தாலும்..அணையாத..
ஒரு தீயாய் நெஞ்சோரம் வந்தாயே..
அடி இடம் வலமாய்..
நான் ஆடினேன் பெண்ணே..
ஒரு இடி மழையாய்...
எனை தாக்கினாய் முன்னே..
ஓ.ஓஓ..ஓ.ஓஓ..ஓ.ஓஓ.
ஓ..ஓஓ..ஓ.ஓஓ..ஓ.ஓஓ..
............
Songs lyrics from raja rani movie:-
