VASEEGARA

 வசீகரா


Movie: Minnale

Singer: Bombay jayashri

Music director: Harris jayaraj 


வசீகரா..என் நெஞ்சினிக்க..
உன்  பொன்மடியில் தூங்கினால் போதும்..
அதே கணம்..என் கண்ணுறங்க..
முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்..
வசீகரா..என் நெஞ்சினிக்க..
உன்  பொன்மடியில் தூங்கினால் போதும்..
அதே கணம்..என் கண்ணுறங்க..
முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்..
நான் நேசிப்பதும் சுவாசிப்பதும் உன் தயவால்தானே..
ஏங்குகிறேன் ஏங்குகிறேன் உன் நினைவால் நானே..


அடைமழை வரும் அதில் நனைவோமே..
குளிர் காய்ச்சலோடு சிநேகம்..
ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்..
குளுகுளு பொய்கள் சொல்லி எனை வெல்வாய்..
அது தெரிந்தும் கூட அன்பே மனம் அதையேதான் எதிர்பார்க்கும்..
எங்கேயும் போகாமல் தினம் வீட்டிலேயே நீ வேண்டும்..
சிலசமயம் விளையாட்டாய் உன் ஆடைக்குள்ளே நான் வேண்டும்..


வசீகரா..என் நெஞ்சினிக்க..
உன்  பொன்மடியில் தூங்கினால் போதும்..
அதே கணம்..என் கண்ணுறங்க..
முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்..


தினம் நீ குளித்ததும் எனை தேடி ..
என் சேலை நுனியால் உந்தன் தலை துடைப்பாயே அது கவிதை..
திருடன் போல் பதுங்கியே திடீரென்று..
பின்னாலிருந்து என்னை நீ அணைப்பாயே அது கவிதை..
யாரேனும் மணி கேட்டால் அதை சொல்ல கூட தெரியாதே..
காதல் எனும் முடிவிலியில் கடிகார நேரம் கிடையாதே..


வசீகரா..என் நெஞ்சினிக்க..
உன்  பொன்மடியில் தூங்கினால் போதும்..
அதே கணம்..என் கண்ணுறங்க..
முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்..
நான் நேசிப்பதும் சுவாசிப்பதும் உன் தயவால் தானே..
ஏங்குகிறேன் ஏங்குகிறேன் உன் நினைவால் நானே நான்..


...........


Song lyrics from Minnale movie:-