PUDHU VELLAI MAZHAI
புது வெள்ளை மழை
Movie:Roja
Singers: Unni menon, Sujatha mohan
Music director: A.R.Rahman
பெண்: புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது..
இந்த கொள்ளை நிலா உடல் நனைகின்றது..
இங்கு சொல்லாத இடம் கூட குளிர்கின்றது..
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது..
ஆண்:புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது..
இந்த கொள்ளை நிலா உடல் நனைகின்றது..
இங்கு சொல்லாத இடம் கூட குளிர்கின்றது..
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது..
பெண்: நதியே...நீயானால்..கரை நானே..
சிறுபறவை நீயானால்..
உன் வானம் நானே..
ஆண்: புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது..
பெண்: இந்த கொள்ளை நிலா உடல் நனைகின்றது..
ஆண்: பெண் இல்லாத ஊரிலே..
அடி ஆண் பூ கேட்பதில்லை..
பெண்: பெண் இல்லாத ஊரிலே கொடிதான் பூப்பூப்பதில்லை..
ஆண்: உன் புடவை முந்தானை சாய்ந்ததில் இந்த பூமி பூப்பூத்தது..
பெண்: இது கம்பன் பாடாத சிந்தனை..
உந்தன் காதோடு யார் சொன்னது..
ஆண்: புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது..
பெண்: இந்த கொள்ளை நிலா உடல் நனைகின்றது..
ஆண்: இங்கு சொல்லாத இடம் கூட குளிர்கின்றது..
பெண்: மனம் சூடான இடம் தேடி அலைகின்றது..
ஆண்: புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது..
பெண்: இந்த கொள்ளை நிலா உடல் நனைகின்றது..
பெண்: நீ அணைக்கின்ற வேளையில்..
உயிர்ப்பூ திடுக்கென்று மலரும்..
ஆண்: நீ வெடுக்கென்று ஓடினால்..
உயிர்ப்பூ சருகாக உலரும்..
பெண்: இரு கைகள் தீண்டாத பெண்மையை..
உன் கண்கள் பந்தாடுதோ..
ஆண்: மலர் மஞ்சம் சேராத பெண்ணிலா எந்தன் மார்போடு வந்தாடுதோ..
பெண்:புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது..
ஆண்: இந்த கொள்ளை நிலா உடல் நனைகின்றது..
பெண்: இங்கு சொல்லாத இடம் கூட குளிர்கின்றது..
ஆண்: மனம் சூடான இடம் தேடி அலைகின்றது..
பெண்: நதியே...நீயானால்..கரை நானே..
சிறுபறவை நீயானால்..
உன் வானம் நானே..
ஆண்: புது வெள்ளை மழை
பெண்: இங்கு பொழிகின்றது..
ஆண்: இந்த கொள்ளை நிலா
பெண்: உடல் நனைகின்றது
ஆண்: புது வெள்ளை மழை
பெண்: இங்கு பொழிகின்றது..
ஆண்: இந்த கொள்ளை நிலா
பெண்: உடல் நனைகின்றது
.......................
song lyrics from roja movie:-
