IRU POOKAL KILAI MELE
இருபூக்கள்
Movie: Uyire
Singer:A.r.rahman, febi mani, anuradha, anupama
Music director: A.r.rahman
இருபூக்கள் கிளை மேலே..
ஒரு புயலோ மலை மேலே..
உயிர் ஆடும் திகிலாலே..
என் வாழ்வின் ஓரம் வந்தாயே.. செந்தேனே..
இருபூக்கள் கிளை மேலே..
ஒரு புயலோ மலை மேலே..
உயிர் ஆடும் திகிலாலே..
என் வாழ்வின் ஓரம் வந்தாயே.. செந்தேனே..
கண்ணீரே..கண்ணீரே.. சந்தோஷ கண்ணீரே.. கண்ணீரே....
தேடி தேடி தேய்ந்தேனே..மீண்டும் கண்முன் கண்டேனே.. பெண்ணே..பெண்ணே..
பெண்ணே பெண்ணே பேசாய் பெண்ணே..
கண்ணே கண்ணே காணாய் கண்ணே..
கண்ணீரே...
கண்ணீரே..கண்ணீரே.. சந்தோஷ கண்ணீரே..
தேடி தேடி தேய்ந்தேனே..மீண்டும் கண்முன் கண்டேனே.. பெண்ணே..பெண்ணே..
பெண்ணே பெண்ணே பேசாய் பெண்ணே..
கண்ணே கண்ணே காணாய் கண்ணே..
கண்ணீரே...
உன் பார்வை பொய்தானா..
பெண் என்றால் திரைதானா..
பெண் நெஞ்சே சிறைதானா..சரிதானா..
பெண் நெஞ்சில் மோகம் உண்டு..
அதில் பருவ தாபம் உண்டு..
பேராசை தீயும் உண்டு..
ஏன் உன்னை ஒளித்தாய் இன்று..
புதிர் போட்ட பெண்ணே.. நில் நில்..
பதில் தோன்றவில்லை..சொல் சொல்..
கல் ஒன்று தடை செய்த போதும்..
புல் ஒன்று புது வேர்கள் போடும்..
நம் காதல் அது போல மீளும்..
கல் ஒன்று தடை செய்த போதும்
புல் ஒன்று புது வேர்கள் போடும்..
நம் காதல் அது போல மீளும்
கண்ணில் கண்ணில் கண்ணீர்.. இன்ப கண்ணீரே..
தேடி தேடி தேய்ந்தேனே..
மீண்டும் கண்முன் கண்டேனே.. பெண்ணே பெண்ணே..
பெண்ணே..பெண்ணே..பேசாய் பெண்ணே..
கண்ணே..கண்ணே..காணாய் கண்ணே..
கண்ணீரே...
பால் நதியே நீ எங்கே..
வரும் வழியில் மறைந்தாயோ..
பல தடைகள் கடந்தாயோ..சொல் கண்ணே..
பேரன்பே உந்தன் நினைவு..
என் கண்ணை சுற்றும் கனவு..
இது உயிரை திருடும் உறவு..
உன் துன்பம் என்பது வரவு..
ஏ..மர்மராணி நில் நில்..
ஒரு மௌனவார்த்தை சொல் சொல்..
உன்னோடு நான் கண்ட பந்தம்..
மண்ணோடு மழை கொண்ட சொந்தம்..
காய்ந்தாலும் அடி ஈரம் எஞ்சும்..
உன்னோடு நான் கண்ட பந்தம்..
மண்ணோடு மழை கொண்ட சொந்தம்..
காய்ந்தாலும் அடி ஈரம் எஞ்சும்..
கண்ணில் கண்ணில் கண்ணீர்.. இன்ப சந்தோஷ கண்ணீரே..சந்தோஷ கண்ணீரே..
சந்தோஷ கண்ணீரே.
தேடி தேடி தேய்ந்தேனே..
மீண்டும் கண்முன் கண்டேனே.. பெண்ணே பெண்ணே..
பெண்ணே..பெண்ணே..பேசாய் பெண்ணே..
கண்ணே..கண்ணே..காணாய் கண்ணே..
கண்ணீரே...கண்ணீரே...சந்தோஷ கண்ணீரே..
கண்ணீரே....
.........
Song lyrics from uyire movie:-
