UNAKENNA VENUM SOLLU
உனக்கென்ன வேணும் சொல்லு
Movie: yennai arindhal
Singer:Benny dayal, mahathi
Music director: Harris jayaraj
உனக்கென்ன வேணும் சொல்லு..
உலகத்தை காட்ட சொல்லு..
புது இடம் புது மேகம் தேடி போவோமே..
பிடித்ததை வாங்க சொல்லு..
வெறுப்பதை நீங்க சொல்லு..
புது வெள்ளம் புது ஆறு நீந்தி பார்ப்போமே..
இருவரின் பகல் இரவு..
ஒரு வெயில் ஒரு நிலவு..
தெரிந்தது தெரியாதது பார்க்க போறோமே..
உலகென்னும் பரமபதம்..
விழுந்த பின் உயர்வு வரும்..
நினைத்தது நினையாதது சேர்க்க போறோமே..
ஒரு வெள்ளி கொலுசு போல இந்த பூமி சிணுங்கும் கீழ..
அணியாத வைரம் போல அந்த வானம் மினுங்கும் மேல..
ஒரு வெள்ளி கொலுசு போல இந்த பூமி சிணுங்கும் கீழ..
அணியாத வைரம் போல அந்த வானம் மினுங்கும் மேல..
கனவுகள் தேய்ந்ததென்று கலங்கிட கூடாதென்று..
தினம் தினம் இரவு வந்து தூங்க சொல்லியதே..
எனக்கென உன்னை தந்து..
உனக்கிரு கண்ணை தந்து..
அதன் வழி எனது கனா காண சொல்லியதே..
நீ அடம் பிடித்தாலும் அடங்கி போகின்றேன்..
உன் மடி மெத்தைக்குள் மடங்கி கொள்கின்றேன்..
தந தாந நத்தர நம்தம்..தந தாந நத்தர நம்தம்..
தந தாந நத்தர நம்தம்..தந தாந நத்தர நம்தம்..
உனக்கென்ன வேணும் சொல்லு..
உலகத்தை காட்ட சொல்லு..
புது இடம் புது மேகம் தேடி போவோமே..
பிடித்ததை வாங்க சொல்லு..
வெறுப்பதை நீங்க சொல்லு..
புது வெள்ளம் புது ஆறு நீந்தி பார்ப்போமே..
பருவங்கள் மாறி வர..
வருடங்கள் ஓடி விட..
இழந்த என் இனிமைகளை உன்னில் கண்டேனே..
எழுதிடும் உன் விரலில்..
சிரித்திடும் உன் இதழில்..
கடந்த என் கவிதைகளை கண்டு கொண்டேனே..
துருவங்கள் போல் நீளும் இடைவெளி அன்று..ஓ..
தோள்களில் உன் மூச்சு இழைகின்றதின்று..
தந தாந நத்தர நம்தம்..தந தாந நத்தர நம்தம்..
தந தாந நத்தர நம்தம்..தந தாந நத்தர நம்தம்..
உனக்கென்ன வேணும் சொல்லு..
உலகத்தை காட்ட சொல்லு..
புது இடம் புது மேகம் தேடி போவோமே..
பிடித்ததை வாங்க சொல்லு..
வெறுப்பதை நீங்க சொல்லு..
புது வெள்ளம் புது ஆறு நீந்தி பார்ப்போமே..
இருவரின் பகல் இரவு..
ஒரு வெயில் ஒரு நிலவு..
தெரிந்தது தெரியாதது பார்க்க போறோமே..
உலகென்னும் பரமபதம்..
விழுந்த பின் உயர்வு வரும்..
நினைத்தது நினையாதது சேர்க்க போறோமே..
ஒரு வெள்ளி கொலுசு போல இந்த பூமி சிணுங்கும் கீழ..
அணியாத வைரம் போல அந்த வானம் மினுங்கும் மேல..
ஒரு வெள்ளி கொலுசு போல இந்த பூமி சிணுங்கும் கீழ..
அணியாத வைரம் போல அந்த வானம் மினுங்கும் மேல..
.....................
Songs lyrics from yennai arindhal movie:-