KAATU PAYALE
காட்டு பயலே
Movie: Soorarai potru
Singer: Dhee
Music director: G.V.Prakash kumar
லல்லாஹி லைரே லைரே..
லல்லாஹி லைரே லைரே..
லல்லாஹி லைரே லைரே..
லல்லாஹி லைரே லைரே..
காட்டு பயலே கொஞ்சி போடா என்ன ஒருக்கா நீ..
மொரட்டு முயல தூக்கி போக வந்த பயடா நீ..
கரட்டு காடா கெடந்த என்ன..
திருட்டு முழிக்காரா தொரட்டி போட்டு இழுக்குறடா நீ..
திருட்டு பூன போல என்ன
உருட்டி உருட்டி பாத்து சுரட்ட பாம்பா ஆக்கிபுட்ட நீ..
என் முந்தியில சொருகி வெச்ச சில்லரைய போல நீ..
இடுப்பு மடிப்பில் என்னென்னமோ செஞ்சிபுட்டு போற நீ..
பாறாங்கல்லா இருந்த என்ன பஞ்சு போல ஆக்கிபுட்ட
என்ன வித்த வெச்சிருக்க நீ..
யான பசி..நான் உனக்கு யான பசி..
சோள பொரி..நீ எனக்கு சோள பொரி..
லல்லாஹி லைரே லைரே..லை..
லல்லாஹி லைரே லைரே..
லல்லாஹி லைரே லைரே..லை..
லல்லாஹி லைரே லைரே..
பாசத்தால என்ன நீயும் பதற வைக்குற..
பத்திக்கிட்டு எரியும் என்ன பாத்து நிக்குற..
ஜிகருதண்டா பார்வையால குளிர வைக்குற..
தூரம் நின்னே என் மனச மேய வைக்குற..
நான் வெளஞ்சு நிக்கும் பொம்பள..
வெக்கம் கெட்டு நிக்குறேன்..
உச்சி கொட்ட வைக்குறியே..வாடா..
நீ எச்சி ஊற வைக்குற..
என் உடம்ப தைக்குற..
எதுக்கு தள்ளி நிக்குற..வாடா..
நான் சாமத்துல முழிக்குறேன்..
சார பாம்பா நெளியுறேன்..
என்ன செஞ்ச என்ன நீ கொஞ்சம் சொல்லுடா..
உன் முரட்டு ஆச எனக்குதான்..
அதுவும் தெரியும் உனக்கு தான்..
என்ன செய்ய உன்ன..தின்னு தீக்க போறன்...
கொஞ்ச கொஞ்சமாக கொஞ்சி கொல்ல போறன்..
வீச்சருவா இல்லாமலே வெட்டி சாய்க்கிற..
வேலு கம்பு வார்த்தையால குத்தி கிழிக்கிற..
சூதனமா அங்க இங்க கிள்ளி வைக்கிற..
சூசகமா ஆசையெல்லாம் சொல்லி வைக்கிற..
நீ தொட்டு பேசு சீக்கிரம்..
விட்டு போகும் என் ஜொரம்..
வெட்டி கத பேச வேணாம்..வாடா..
நான் ஓல பாய விரிக்கிறேன்..
உனக்கு விருந்து வைக்கிறேன்..
முழுசா என்ன தின்னுபுட்டு போடா..
நீ எதுக்கு தயங்கி நிக்கிற..
என்ன ஒதுக்கி வைக்கிற..
சும்மா முரடு புடிக்குற.. கட்டி அள்ளுடா..
உன் முரட்டு திமிரு எனக்கு தான்..
அதுவும் தெரியும் உனக்கு தான்..
பொத்தி வெச்ச ஆச..பொங்குதடா உலையா..
பொத்துகிட்டு ஊத்த..போகுதடா மழையா..
லல்லாஹி லைரே லைரே..லை..
லல்லாஹி லைரே லைரே..
லல்லாஹி லைரே லைரே..லை..
லல்லாஹி லைரே லைரே..
...............
Songs lyrics from soorarai potru movie:-
