VEYYON SILLI

 வெய்யோன் சில்லி 


Movie: Soorarai potru

Singers:Harish sivaramakrishnan

Music director: G.V.Prakash kumar


சீயஞ் சிறுக்கி கிட்ட சீவன தொலச்சிட்டேன்..
சோட்டு வளவிக்குள்ள மாட்டிக்க வளஞ்சிட்டன்..
உள்ள பட்டறைய போட்டுட்டு..
ஏழரைய கூட்டிட்டு..
தப்பிச்சு போறாளே அங்கிட்டு..
இவ வீதியில் வாரத வேடிக்க பாக்கதான் விழுந்த மேகங்கள் எம்புட்டு..
இடுக்கியே..இடுக்கியே..
அடிக்கிறா..அடுக்கியே...

வெய்யோன் சில்லி இப்ப நெலத்தில் எறங்கி அனத்துறா..
லந்தா பேசி என்ன ஒரண்ட இழுக்குறா..
கட்டாரி கண்ணாலே உட்டாளே தெறிக்குறேன்..
ஒட்டார சிட்டால மப்பாகி கெடக்குறன்..

என் உசுருல சல்லட சலிச்சு ஏன் சிரிக்குற அரக்கியே..
உன் குறுக்குல என்னய முடிச்சு நீ நடக்குற மருக்கியே..
மல்லாட்ட ரெண்டா..என்னாட்டம் வந்தா..
ஓய்..என் உசுருல சல்லட சலிச்சு ஏன் சிரிக்குற அரக்கியே..
உன் குறுக்குல என்னய முடிச்சு நீ நடக்குற தருக்கியே..ஏ..ஏ..ஏ..

என் காது ஜவ்வுல எசையும் ஒவ்வுல
நீ மட்டும் பேசடி..
ஏழட்டும் நாளுட்டும் எதுவும் உங்கள இச்சொண்ணு வீசடி..
கண்ணுல ஒதடு  மின்னலு தகடு
எனக்கு தானடி..
சட்டையில் பாக்கெட்டே தச்சது உன்னய பதுக்கதானடி..
தின்னா..ஆணம் வெச்சு தின்னா...
உள்ளே..கொக்காமக்கா நின்னா...

என் உசுருல சல்லட சலிச்சு ஏன் சிரிக்குற அரக்கியே..
உன் குறுக்குல என்னய முடிச்சு நீ நடக்குற தருக்கியே...

தொரட்டி கொரலா பெரட்டி எவ்வியே இதயம் பறிச்சியே..
கரண்டு கம்பிய சொரண்டி கெடந்தன் கதண்ட எரிச்சியே..
ஓ...பதனம் ஒதற கவனம் செதற மனச கலைச்சியே..
கருக்க பொழுதில் சிரிச்சு தொலைச்சு பகல படைச்சியே..
தீயா இவ வந்தா..
மண்டவெல்லம் துண்டா...
உண்டா..இந்த ஜிகர்தண்டா..

ஓய்...என் உசுருல சல்லட சலிச்சு ஏன் சிரிக்குற அரக்கியே..
உன் குறுக்குல என்னய முடிச்சு நீ நடக்குற தருக்கியே..

வெய்யோன் சில்லி இப்ப நெலத்தில் எறங்கி அனத்துறா..
லந்தா பேசி என்ன ஒரண்ட இழுக்குறா..
கட்டாரி கண்ணாலே உட்டாளே தெறிக்குறேன்..
ஒட்டார சிட்டால மப்பாகி கெடக்குறன்..
                                      





.....................






Songs lyrics from soorarai potru movie:-